"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவர்கள் புகைத்துக் கொண்டிருக்க நான் திட்டி அறிவுறுத்திய நிலையில் தாங்கள் தனுஷை பார்த்து சிகரெட் புகைப்பதாக சொன்ன போது அதிர்ச்சி அடைந்தேன். ஒரு தந்தையாக நின்று தயவு செய்து புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிருங்கள்". என இப்படிப்பட்டதான ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் சில வருடங்களுக்கு முன்பு பதிவு செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர் தான் பிரபல இயக்குனர் வ.கௌதமன். ஆனால் தற்பொழுது இவரது மகன் யாருடைய படத்தை பார்த்து போதையில் போலீசாரிடம் சிக்கி இருக்கிறார் என தெரியவில்லை என்று நெட்டிசன்கள் பரவலாக பேசி வருகின்றனர். அப்படியான ஒரு சம்பவம் தான் இன்று நிகழ்ந்துள்ளது.

வ.கௌதமன் என்ற பெயரை எங்கோ கேட்டது போல் இருக்கிறது என்றால் 1999 ஆம் ஆண்டு முரளி மற்றும் சிம்ரன் நடித்த "கனவே கலையாதே" என்ற திரைப்படத்தை நினைவு கூற வேண்டும். ஏனெனில் அந்தப் படத்தின் இயக்குனர் தான் வ.கௌதமன். இந்தத் திரைப்படத்தின் மூலமாக தமிழில் பிரபல இயக்குனராக அறிமுகமான இவர், 2010 ஆம் ஆண்டு "மகிழ்ச்சி" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இவரது படங்களை விட இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சந்தனக்காடு' மற்றும் 'ஆட்டோ சங்கர்' போன்றவர்களின் பயோபிக் தொடர்களை இயக்கி மக்கள் மத்தியில் தனது பெயரை நிலை நாட்டியவர்.
இதையும் படிங்க: பெருமாள தொட்ட நீ கெட்ட..! வார்னிங் கொடுத்த நீதிமன்றம்.. கம்ப்ளீட்டாக பாடலை நீக்கிய சந்தானம் டீம்..!

இவர் தற்பொழுது, வி.கே.ப்ரொடக்ஷன் தயாரிப்பில், இவரது இயக்கத்தில் 'படையாண்ட மாவீரா' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவான முதல் பாடலை வெளியிட்டார். படத்தின் வெளியீட்டுக்காக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், வ.கௌதமனின் மகன் போலீசாரின் பிடியில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதன்படி, இயக்குனர் கௌதமனின் மகன் தமிழழகன் சென்னை அண்ணா நகரில் மளிகை கடை உரிமையாளர் மீது மது போதையில் தாக்குதல் நடத்தியதாக கூறி காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். அதன்படி சண்முகம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்று உள்ளது. சண்முகத்தின் புகாரில், அவர் அவரது குடும்பத்தினருடன் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தனது ஆட்டோவில் வீடு திரும்பி உள்ளார்.
அப்பொழுது சாலையில் சென்று கொண்டிருந்த சண்முகத்தின் ஆட்டோ மீது குடிபோதையில் வந்த இயக்குனர் கௌதமனின் மகன் தமிழழகன் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் மோதி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகம் ஆட்டோவில் இருந்து இறங்கி தமிழழகனிடமும் சரத்திடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனை அடுத்து தமிழழகனும் சரத்தும் சேர்ந்து சண்முகத்தை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட பக்கத்தில் உள்ள மளிகை கடைக்காரர் அதனை தடுக்க முற்பட்டு உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தமிழழகன் அவரைத் தாக்கியாதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர் சினிமா இயக்குனரான கௌதமனின் மகன் என்பதும் அவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் பின்பு காவல் நிலைய ஜாமினில் விடுதலை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அய்யா அய்யா முருகய்யா.. மாமன் படத்தை பாரய்யா..! மண்சோறு சாப்பிட்ட சூரியின் ரசிகர்கள்..!