இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ள படம் தான் மாமன். இந்த படம் நெற்றி வெளியாகி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது படம் வெளியான அதே நேரத்தில் நடிகர் சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்', நடிகர் யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' திரைப்படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனவே கூறலாம்.

சூரியின் எழுத்தில் வெளியாகியுள்ள இந்த 'மாமன்' படத்தை பார்த்து தியேட்டரில் அனைவரும் கண்கலங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை உள்ளது. அப்படி என்ன தான் கதை என பார்த்தால், இன்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் சூரிக்கு ஒரு அழகான அக்கா இருக்கிறார் அவரது பெயர் கிரிஜா. இந்த கிரிஜாவிற்கும் ரவிக்கும் திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து உள்ளது.
இப்படி இருக்க, ஒரு நாள் உறவினர் ஒருவரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருக்கிறார் கிரிஜா, அங்கு அவரைப் பார்த்த அவருடைய மாமியார், உனக்கு இன்னும் குழந்தை பாக்கியமே இல்லை நீ எதற்கு இங்கு வந்தாய் என்று கூறி அவரை கரித்துக் கொட்ட, அவர் மீது திடீரென வாந்தி எடுத்து விடுகிறார் கிரிஜா. வாந்தி எடுத்த மருமகளை கோபமாக பார்த்த மாமியார், அவள் மாசமாக இருக்கிறார் என்று சொன்னவுடன் அந்த கோபம் தணிந்து அவரை அன்புடன் அரவணைக்கும் காட்சிகள் நன்றாகவே இருந்தது.
இதையும் படிங்க: முருகனே உங்கள மன்னிக்க மாட்டார்.. இப்படி பண்றவங்க எனக்கு ரசிகரா இருக்க தகுதியே இல்லை.. சூரி ஆவேச பேச்சு..!

10 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் பெற்ற தனது அக்காவை நலமுடன் பார்த்துக் கொள்ளும் தம்பி இன்பா, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, வயிற்றில் வளரும் குழந்தையிடம் 'என்னை பெற்றாரே' என சொல்லி அழுவார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி தான் மருத்துவர் அவர் கவனிப்பில் தான் இன்பாவின் அக்காவிற்கு குழந்தை பிறக்கிறது. அங்கு சூரி தனது அக்காவின் மீது வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு இம்பிரஸ் ஆகும் ஐஸ்வர்யா, அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வார்.

இதுவரை மாமனுடன் மட்டுமே இருந்த அக்காவின் மகன், நான் சூரி உடன் தான் இருப்பேன் என அடம் பிடிப்பதும் அவருடன்தான் தூங்குவேன் என அடம் பிடிப்பது எல்லாம் பெரிய பிரச்சனையாக மாறி சூரியினுடைய வாழ்க்கைக்கு பாதகமாக முடிகிறது. இதனால் அக்கா தம்பி உறவுக்குள் மிகப்பெரிய விரிசல் வர, கடைசியில் அக்கா தம்பி இருவரும் சேருவார்களா? மாட்டார்களா? என்பதை கதையின் க்ளைமாக்ஸ் ஆக வைத்துள்ளனர்.

இப்படியான 'மாமன்' படத்தை பார்த்த சிறுமி அவரது தாய் மாமனை நினைத்தாரோ என்னமோ தெரியவில்லை. படம் பார்க்கும் பொழுது அழ ஆரம்பித்தவர் படம் முடிந்த பின்பும் அழுது கொண்டே இருந்துள்ளார். இதனை பார்த்த சூரியின் நண்பர், உடனே நடிகர் சூரிக்கு போன் செய்து நடந்தவற்றை கூற, அந்த சிறுமியை ஆறுதல் படுத்த வீடியோ கால் மூலமாக வந்தார் நடிகர் சூரி. பின் எதற்காக அழுதீர்கள் என்ற காரணத்தை கேட்ட சூரி, பின் அந்த சிறுமியை ஆறுதல் படுத்தினார்.

இந்த நிகழ்வுகளை தனது எக்ஸ் தளவாயிலாக பதிவிட்ட நடிகர் சூரி அதில், "இது எனக்கு ஒரு ஸ்பெஷல் ரிவ்யூ! “மாமன்” படம் பார்த்த பிறகு, இந்த பாப்பா தன்னுடைய தாய்மாமாவை ரொம்பவே மிஸ் பண்ணுறா இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தருணம் கிடைத்தது என்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. தன்னுடைய அன்பான மாமாவை மனதில் வைத்து நினைத்து வருகிற இந்த பாப்பாவின் தாய்மாமாவுக்கு, இந்த படத்தின் வாயிலாக என் அன்பும், மனமார்ந்த வாழ்த்துகளும்" என பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: நடிகர் சூரியுடன் நடக்க இதுதான் காரணம்..! மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா..!