டிராகன் திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றதுடன் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனும் தற்பொழுது நிறைய படங்களில் நடிக்கிறார்.

குறிப்பாக இவர் நடிக்கும் திரைப்படத்தில் நடிகை சமந்தாவும் கெஸ்ட் ரோலில் அவருடன் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குநரும் அடுத்து சிம்புவை வைத்து படம் இயக்குவதில் பிசியாக இருக்கிறார். இப்படி பலரது வாழக்கையை மாற்றிய இப்படத்தின் முக்கிய கதாநாயகியான "கயாடு லோஹரின்" வாழ்க்கையையும் இப்படம் மாற்றியுள்ளது என்றால் மிகையாகாது.
இதையும் படிங்க: எக்ஸ்டரா கியூட்னஸ்... ரியாக்ஷனால் உள்ளதை கொள்ளையடிக்கும் கயாடு லோஹர் போட்டோஸ்!

இதுவரை அவரது எக்ஸ் தளத்தில் அவர் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதில் குறிப்பாக தமிழ் மக்களுக்கு நன்றி, புது படங்களில் நடிக்கிறேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார். அதில் முதலாவதாக அவர் பதிவிட்ட பதிவில், "எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. தனக்கும் டிராகன் படத்திற்கும் அதில் வரும் பல்லவி கதாபாத்திரத்தீர்க்கும் கிடைக்கும் வரவேற்பு இதுவரை எங்கும் கிடைக்காத ஒன்று. இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்கள் எனக்கு அடிக்கும் விசிலாகட்டும்.

இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதெயெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தமிழ்ப்பொண்ணும் இல்லை. எனக்கு தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு விலைமதிக்காதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி உங்களுக்கு தருவேன்" என கூறி இருந்தார்.

இப்படி இருக்க, டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவை வைத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதில், கயாடு லோஹரும் ஒருவர். இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் நடிக்கும் 3ஆவது படமே பெரிய ஸ்டார் மற்றும் பெரிய பட்ஜெட் படம் என பலராலும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகை கயாடு லோஹர் இதயம் முரளி, STR 49, ஜீ.வி.பிரகாஷ் உடன் ஒரு படம் என பல படங்களை தனது கையில் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்பொழுது தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார் கயாடு. அந்த வகையில், டிராகன் படத்தில் ரூ.30 லட்சம் வரை சம்பளம் பெற்ற கயாடு லோஹர் தற்பொழுது இதயமுரளி மற்றும் சிம்பு படத்தில் நடித்து வருவதால், தான் நடித்து வரும் படங்களுக்கு ரூ.2கோடியை சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இதழின் ஒரு ஓரம் சிரிப்பால் மயக்கும் கயாடு லோஹர்..! ஆடை அழகில் அசத்தும் சென்சேஷ்னல் நடிகை..!