தெலுங்கு சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர், தேஜா சஜ்ஜா. 2011-ம் ஆண்டு “சாம்பி ரெட்டி” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், தற்போது முழு நேர ஹீரோவாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, 2024ல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹனுமான்” திரைப்படம் இவரது கெரியரில் ஒரு முக்கிய வெற்றி மைல்கல்லாக இருந்தது. அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த படம் தான் “மிராய்”. தொழில்நுட்ப ரீதியாகவும், கதை வடிவமைப்பிலும் புதியதொரு பாணியில் உருவாகியுள்ள "மிராய்", கார்த்திக் கட்டாமானேனி என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இவர் ஒரு முன்னணி ஒளிப்பதிவாளராக திரையுலகில் பரிச்சயம் பெற்றவர். இப்போது இயக்குநராகவும் தனது திறமையை நிரூபிக்க விரைந்துள்ளார். இத்திரைப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கிறது. இப்படம் தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும், 2D மற்றும் 3D வடிவங்களில் வெளியாகவுள்ளது. 2024-ம் ஆண்டு இறுதியில் வெளியான மிராய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூப்பர் ஹீரோ கேட், கருப்பு-சிவப்பு கலரேஷன் கொண்ட பாஸ்டூம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த காட்சிகள், இதை ஒரு புத்தம் புதிய இந்திய சூப்பர் ஹீரோ படம் என்று சித்தரிக்கச் செய்தது. அதனைத் தொடர்ந்து, டிரெய்லரும் வெளியாகி, சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது. குறிப்பாக, தேஜா சஜ்ஜாவின் மாறுபட்ட முகபாவனைகள், அவின் ஆக்ஷன் சீன்கள், மற்றும் VFX காட்சிகள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. இந்த டிரெய்லர் மட்டும் பார்க்கும்போதே, படம் உயர்தர காமிக்ஸ் புத்தகங்களையும், ஹாலிவுட் ஸ்டைல் சினிமாக்களையும் நினைவூட்டுகிறது என சொல்லப்படுகிறதாம். அத்துடன் “மிராய்” என்ற பெயரே ஜப்பான் மொழியில் “எதிர்காலம்” என்று பொருள் கொண்டது. இப்படத்தின் கதையும் எதிர்கால உலகத்தையும், அதில் நிகழும் விஞ்ஞான அபாயங்களையும் பற்றியதுதான் என்று கூறப்படுகிறது.

தேஜா சஜ்ஜா இப்படத்தில் இளைஞர் விஞ்ஞானியாக, ஒரு மனிதனுக்குள் நுழைந்த பைனரி திட்டத்தின் விளைவுகளை எதிர்க்கும் ஹீரோவாக தோன்றுகிறார். இப்படத்தில் ரித்திகா நாயக், அவரது காதலியாக நடித்திருக்கிறார். மேலும், முக்கிய எதிர்மறை கதாபாத்திரமாக மனோஜ் மஞ்சு வில்லனாக நடித்திருக்கிறார். இந்த வேடம் அவர் நடிப்பில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், “மிராய்” படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. அதாவது, குழந்தைகளும் பெற்றோர்களுடன் பார்த்து மகிழக்கூடிய படம் இது என்பது தணிக்கை குழுவின் மதிப்பீடு. படக்குழு இது குறித்து அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு, ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, படம் குறித்த மற்றொரு தகவலாக, செப்டம்பர் 12-ம் தேதி அனைத்து மொழிகளிலும் படம் ஒரே நேரத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னை யாரும் அப்படி கூப்பிடாதீங்க.. நடிகர் தேஜா சஜ்ஜா வேண்டுகோள்..!!
மிராய் படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள், அதாவது VFX, CG, டிஜிட்டல் கிராஃபிக்ஸ், ஃப்ரேம் அத்தியாயங்கள் உள்ளிட்டவை அனைத்தும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இந்த படத்தின் VFX வேலைகளை முன்னணி ஸ்டுடியோக்கள் செய்திருக்கின்றன. இது இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு ஒரு மாறுபட்ட அடையாளமாக இருக்கக்கூடியது.மேலும் தெலுங்கு சினிமாவில் சாமான்ய கதைகளைத் தாண்டி, புதிய பாணியில் ஸூப்பர் ஹீரோ களத்தில் களமிறங்கிய நடிகர் தேஜா சஜ்ஜா என்பதே தற்போது அனைவரும் கூறும் செய்தி. “ஹனுமான்” பட வெற்றிக்கு பிறகு, அவரை பாராட்டு தட்டி எழுப்பிய ரசிகர்கள், “மிராய்” படத்தின் மூலமாக அவரை புதிய உயரத்தில் பார்க்க தயாராக உள்ளனர். ஆகவே தெலுங்கு மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க “மிராய்” படத்தை நோக்கிய மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சூப்பர் ஹீரோ கதைகள், அதிக தொழில்நுட்பம், நவீன விஷுவல் அனுபவம், பன்மொழி வெளியீடு, வித்தியாசமான கதை என இவை அனைத்தும் சேரும் போது, “மிராய்” தெற்கிந்திய சினிமாவின் முதல்தர ஹைபட்ஜெட், பாப்-கலாச்சார திரைப்படமாக மாரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டாமானேனி, மற்றும் பீப்புள் மீடியா பேக்டரி ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் படம், பட்ஜெட், தொழில்நுட்பம், கதை என மூன்றிலும் சாதனை படைக்கக்கூடிய படமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போதை வழக்கிற்குப் பிறகு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நடிகர் ஸ்ரீகாந்த்..!