தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனிச்சிறப்பை ஏற்படுத்தியவர் தான் நடிகை தமன்னா பாட்டியா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளதோடு மட்டுமல்லாமல், அழகு, ஆட்டம், அருவருப்பு இல்லாத நடிப்பு மற்றும் திறமை ஆகியவற்றால் இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். அதுவும் சமீப காலங்களில் தனி பாடல் காட்சிகளில் இவர் ஆடிய நடனங்களால் பலதரப்பட்ட ரசிகர்களை பெற்றுள்ளார். குறிப்பாக ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற “காவலா” பாடலில் அவர் ஆடிய புகழ்பெற்ற நடனம், ரசிகர்கள் மத்தியில் அவருக்கான அடையாளத்தை ஏற்படுத்தியது. இணையம் முழுவதும் வைரலான அந்த காட்சி, அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத் தந்தது என்றே கூறலாம்.
இப்படியாக தனது தொழில் வளர்ச்சியோடு, தமன்னா கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் உறவில் இருந்தார். இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாகி இருந்தன. ஆனால், இந்தக் காதல் நீண்ட நாட்களுக்கு தொடரவில்லை. சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக இருவரும் சினிமாவில் தொடர்ந்து முன்னேற இருக்க முடிவெடுத்துள்ளனர். இந்த பிரிவுக்கு பிறகு, தமன்னா திரையுலகில் மீண்டும் பிசியாகப் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி திரையுலகங்களில் பன்முகத் திறனுடன் நடிக்க தொடங்கியுள்ளார். இதுவே, அவரது மீண்டும் எழுச்சிக்கு வழிவகுக்கும் ஒரு புதிய கட்டம் என்று கூறலாம். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு அழகு மற்றும் சுகாதார ரீதியான பேட்டியில் தமன்னாவிடம், அவருடைய அழகும், பராமரிப்பும் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அபொழுது அவர் கூறிய தனிப்பட்ட அழகுசார்ந்த ரகசியம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதன்படி அவர் பேசுகையில், " என் முகத்தில் பருக்கள் வரும் போது, வேறு எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்வதில்லை. நான் எப்போதும் பருக்களின் மீது எச்சிலை வைப்பேன். இது எனக்கு பயனுள்ளதாக அமைந்து, பருக்கள் விரைவில் குணமாகிவிடும்" என தமன்னா தெரிவித்துள்ளார். தமன்னாவின் இந்த அழகு சார் பராமரிப்பு நடைமுறை பாரம்பரியமாகவும், சிலர் பின்பற்றும் முறையாகவும் இருக்கலாம். ஆனால், இது அறிவியல் ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை அல்ல என்பதையும், ஒவ்வொரு தோலுக்கும் தனிப்பட்ட தேவைகள் உள்ளன என்பதையும் டெர்மடாலஜிஸ்ட்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிலர் இதனை பழங்கால நம்பிக்கையாக பார்க்கின்றனர்; ஆனால் சிலர், இது இயற்கை சிகிச்சை என்றும் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: திருமணம் செய்து கொண்டால் சினிமா விட்டு போயிடனுமா..! நடிகை பார்வதி நாயர் காட்டமான பேச்சு..!
எச்சிலில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் இருப்பது உண்மை தான். ஆனால், அதை நேரடியாக முகத்தில் தடவுவது பற்றி அறியப்பட்ட மருத்துவ ஆதாரங்கள் இல்லாததால், இத்தகைய நடைமுறைகளை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். ஆகவே தமன்னா தனது அழகு பராமரிப்பு நடைமுறையை எந்தவித மறைமுகமில்லாமல் நேர்மையாக பகிர்ந்ததற்காக ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். தனது தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டே இந்த ஆலோசனையை பகிர்ந்திருக்கிறார். தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கும் தமன்னா, திருமணம், காதல் வாழ்க்கை, அழகு பராமரிப்பு என தனக்கு ஏற்பட்ட அனைத்து மாற்றங்களையும் சகிப்புத்தன்மையோடும், தெளிவோடும், தன்னம்பிக்கையோடும் கையாள்வது தெளிவாகவே தெரிகிறது. அவருடைய திறமை, அழகு, நம் மனங்களை கவரும் நடிப்பு மற்றும் நேர்மையான அணுகுமுறை ஆகியவை, எதிர்காலத்தில் மேலும் பெரிய வெற்றிகளை அவருக்கு நிச்சயமாகத் தரும். அதிலும் தமன்னா கூறியது போல, அழகு என்பது புறஅலங்காரமோ இல்லையென்றால் சிகிச்சையோ மட்டுமல்ல. அது நம்மை நாமே எப்படி பராமரிக்கிறோம் என்பதிலேயே இருக்கிறது.

ரசிகர்களுடன் நேர்மையாக பகிர்ந்து கொள்ளும் நடிகைகள் நிச்சயமாக அவர்களிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அழகு என்றால் தமன்னா என்று சிலர் கூறுவதற்கு ஏற்றாற்போல், அவர் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். மேலும் பல திரைப்படங்கள், புதிய வேடங்களில் தமன்னாவை விரைவில் திரையில் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஒரு பக்கம் ரஜினி பேச்சு.. மறுபக்கம் அஜித் குமார் அறிக்கை..! களைகட்டும் இணையதளம்..!