தமிழ் திரையுலகில் இந்த 2025 ஆரம்பத்தில் இருந்து பல படங்கள் வெளியாகி வெற்றியும் கண்டுள்ளது. தோல்வியும் கண்டுள்ளது. இப்படி இருக்க இதுவரை தமிழில் வெளியான படங்களில் வசூலை வைத்து டாப் 5-ல் எந்த படங்கள் உள்ளது என பார்க்கலாம்.

ரெட்ரோ - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் "ரெட்ரோ" படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படம் சூர்யாவின் 44வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இப்படம் மே 1ம் தேதி வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இப்படி இருக்க, ஜூன் மாதம் 5ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த சூழலில் "இப்படம் தற்பொழுது ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து ஆறாவது இடத்தில்" உள்ளது.
இதையும் படிங்க: ஒரே வருடத்தில் இத்தனை சோதனையா.. விபத்தில் தந்தையை பறிகொடுத்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ..!

மத கஜ ராஜா - பலரது எதிர்பார்ப்புகளின் மத்தியில் இயக்குனர் சுந்தர் சி-யின் இயக்கத்தில் 12 வருடங்கள் கழித்து வெளியான திரைப்படம் தான் மத கஜ ராஜா. நடிகர் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், மனோபாலா ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த படம் பலரது பாராட்டையும் பெற்றது. இத்திரைப்படம் "இதுவரை ரூ. 54 கோடி வசூல் செய்து ஐந்தாவது இடத்தில்" உள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி - மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் தங்களது அபார நடிப்பை காண்பித்துள்ளனர். இப்படத்தை இதுவரை அமைச்சர் மா. சுப்ரமணியன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், இயக்குனர் ராஜமௌலி, நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, என படத்தை பார்த்த பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்து வரும் கூட்டங்கள் அதிகமாக உள்ளது. மேலும் இலங்கையில் இப்படத்தை பார்த்த மக்கள் இப்படத்தின் இயக்குனருக்கு நன்றி செலுத்தி வருகின்றனர். இப்படம் தற்பொழுது இந்தியாவை கடந்து ஜப்பானிலும் வெற்றி நடைபோட்டு வருகிறது. இப்படி இருக்க அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் இதுவரை "பாக்ஸ் ஆபிசில் ரூ.91 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் நான்காவது இடத்தில்" உள்ளது.

டிராகன் - கோமாளி மற்றும் லவ் டுடே படம் பிரதீப் ரங்கநாதனுக்கு டிராகன் படம் பெரிய புகழையே தேடி தந்துள்ளது. இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமான AGS என்டேர்டைன்மெண்ட் கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான் ஆகியோர் இணைப்பில் உருவாகி கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்த திரைப்படம் தான் "டிராகன்". இத்திரைப்படம் வெளியாகி 100 வது நாளையும் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனால் டிராகன் படத்தின் 100 வது நாள் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று கோலாகமாக நடைபெற்றது. இந்த சூழலில் "டிராகன் திரைப்படம் ரூ.110 கோடிக்கு மேல் வசூலித்து லிஸ்டில் மூன்றாவது இடத்தில்" உள்ளது.

விடாமுயற்சி - லைகா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிபில், மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில், அஜித் குமார், திரிசா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் பிப்ரவரி 6 அன்று வெளியான திரைப்படம் தான்"விடாமுயற்சி". ரசிகர்களின் பல வருஷ கேள்விகளுக்கும் குமுறல்களுக்கும் கிடைத்த வெற்றியாக இந்த விடாமுயற்சி படம் பார்க்கப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் படத்தின் தலைப்புக்கு ஏற்ப, நடிகர் அஜித் குமார் காரை வைத்து ஸ்டண்ட் செய்த காட்சிகள் இணையத்தில் பரவி படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது.கடந்த மார்ச் 3 அன்று "விடாமுயற்சி" திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் படத்தை கொண்டாடிய ரசிகர்கள், ஓடிடியிலும் இப்படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். என்னதான் இந்த படம் வெற்றி அடைந்தது என அனைவரும் கூறினாலும் லைகா நிறுவனம் அதனை மறுத்துள்ளது. அதன்படி, படம் வசூல் ஆனது ரூ.170 கோடி தான் ஆனால் படத்திற்கான செலவு ரூ.298 கோடி என கூறி இருக்கின்றனர். இந்த சூழலில் "இதுவரை ரூ.85 கோடி முதல் ரூ.170 வரை வசூலை ஈட்டி இரண்டாவது இடத்தில் உள்ளது" விடாமுயற்சி.

குட் பேட் அக்லி - நடிகர் அஜித்தின் 63வது திரைப்படம் தான் ‛குட் பேட் அக்லி'. இந்த திரைப்டத்தை இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து அசத்தியுள்ளார். இந்த படத்தில் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருப்பார் அர்ஜுன் தாஸ். அதுமட்டுமல்லாமல் த்ரிஷா குரலில் "உங்களுடன் நூறு வருடம் வாழனும்" என போனில் ஒருவர் பேச, அது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் வந்த தனது மனைவியின் குரல் என்பதை உணர்ந்த அஜித், "எந்த மனைவி டா கட்டின புருஷனுடன் நூறு வருடம் வாழனும் என சொல்லுவார்" என சொல்ல, தியேட்டரில் விசில் பறந்தது. இறுதியில் படத்தில் சண்டை காட்சிகளில் "ஆளுமா டோலுமா" பாடலை வைத்து சண்டையிடுவது அமோகமாக இருந்தது. மேலும் இப்படத்தை ரூ. 90 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படி இருக்க இத்திரைப்படம் " பாக்ஸ் ஆபிசில் இதுவரை ரூ.180 கோடி வசூல் செய்து முதல் இடத்தில்" உள்ளது.

மேலும், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன், தக் லைப் முதலான படங்கள் வெற்றி கண்டாலும் வசூல் பெரிதளவில் இல்லை.
இதையும் படிங்க: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மொத்த வசூல் இவ்வளவா..! ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்..!