காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பைசரன் பகுதியில், ஏப்ரல் 22 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.

இந்த சூழலில், பஹல்காமில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, இந்திய ராணுவம் மே 7ம் தேதி நள்ளிரவில் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு தளங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் அனைத்தின் மீதும் அதிரடி தாக்குதல் நடத்தியது. "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை பாக்கிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள மக்களே எதிர்பார்க்காத நிலையில் இந்தத் தாக்குதலை பொதுமக்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலரும் கொண்டாடி தீர்த்தனர்.
இதையும் படிங்க: இப்படியா படம் எடுப்பாங்க.. யார் அந்த டைரக்டர்..! டூரிஸ்ட் ஃபேமிலி பற்றி விமர்ச்சித்த அமைச்சர் மா.சு..!

மேலும், பாக்கிஸ்தான் அதிபர் ஏற்கனவே இந்தியா அடித்தால் திருப்பி அடிப்போம் என சொன்னது போல் நடந்துவிட கூடாது என்பதற்காக எல்லா இடங்களையும் இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வண்ணம் ஐடி ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் முதல் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த வேளையில் இந்திய எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் பாகிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த சூழலில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை சிம்ரன், இந்தியா- பாகிஸ்தான் இடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போரால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் எல்லாம் சரியாக போய் கொண்டு உள்ளது. போர் பதற்றம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று நான் கடவுளை பிராத்திக்கிறேன். ஆனால் கண்டிப்பாக போரின் முடிவில் மனிதநேயம் தான் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

அதுமட்டுமல்லாமல் நான் நடித்து வெளியாகியுள்ள 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் வெற்றியடைந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் என்னுடைய 30 வருட திரைவாழ்க்கையில் நான் நடித்த சிறந்த படம் என்றால் அது டூரிஸ்ட் ஃபேமிலி படம் தான். சினிமாவை விட்டு சென்ற கதாநாயகிகள் மீண்டும் சினிமாவிற்கு வருவது நல்லதுதானே. பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்ள். இதனை அடுத்து விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு "இது இப்பொழுது வேண்டாமே நேரம் வரும்பொழுது பேசுகிறேன்" என கூறி சென்றார்.
இதையும் படிங்க: 'ரெட்ரோ'வை விஞ்சிய 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம்.. காட்சிகள் அதிகரிப்பால் படக்குழு குஷி.!!