கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் அடுத்த பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்களை கூறிவந்த நிலையில், சமீபத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் இன்று ஒரே நாளில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது.

என்னதான் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு மூன்று நாட்கள் ரசிகர்களை பதறவைத்து தான் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பிரச்சனையை குறித்து இரண்டு காரணங்களை மக்கள் தரப்பில் முன் வைக்கின்றனர். சந்தானத்தின் படத்தின் டீசர் வெளியான பொழுது எந்த பிரச்சனையும் வரவில்லையாம் அவர் உதயநிதிக்கு ஆதராவாக பேசிய பின்பு தான் இந்த பிரச்சனை ஆரம்பமானது என்கின்றனர். அந்த வகையில் பார்த்தால் சமீபத்தில் நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் பட ஃப்ரமோஷனில் பேசும்பொழுது பத்திரிக்கையாளர்கள்,
இதையும் படிங்க: வெற்றிமாறன் நிராகரித்தார் தயாரிப்பாளர் ஆதரவு கொடுத்தார்..! பொல்லாதவன் படம் குறித்து பேசிய சந்தானம்.!

உங்கள் நண்பர்கள் லிஸ்டில் ஆர்யா, விஷால், ஜீவா இருப்பதை போல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இருக்கிறார் என தெரியும். அவர் உங்களை 2026 தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்ததால் செல்வீர்களா? என கேட்க, அதற்கு சந்தானம் எனது நிலைப்பாடும் நான் கூறுவதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தால் கண்டிப்பாக பண்ணுவேன் என சொன்னார். இந்த பேட்டிக்கு பின்பு தான் சந்தானத்தின் படம் மீது இப்படி எதிர்மறையான விஷயங்கள் நடக்கிறது என மக்களின் ஒரு தரப்பில் கூறி வருகின்றனர்.

மற்றொரு தரப்பில் பார்த்தால் இப்படி கடவுளினுடைய பாடலை வைத்து கேலி செய்தால் எப்படி, இதே போல் மற்ற மதத்தினரை உங்களால் செய்ய முடியுமா என கூறி வந்தனர். இதனை அடுத்து முதலில், 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் மீது சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர். அவர்களை தொடர்ந்து, திருப்பதி சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் பெருமாள் குறித்து வரும் பாடலை நீக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனு அளித்ததுடன், டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட தயாரிப்பாளர் மீதும் திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தள்ளனர் ஜனசேனா கட்சியினர்.

இவர்களை தொடர்ந்து, இந்த படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பெருமாள் பாடலை நீக்கக் கோரி, நடிகர் சந்தானம் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனை குறித்து நடிகர் சந்தானத்திடம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தானம், சட்டரீதியாக நீதிமன்றம் மற்றும் போர்டுக்கு மட்டுமே என்னால் கட்டுப்பட முடியும். சும்மா ரோட்டில் போகின்றவர்கள் வருகிறவர்கள் சொல்வதற்கு எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என கூறியிருந்தார்.

இதனை பார்த்து, சந்தானம் பாட்டை நீக்க மாட்டார் போல என அனைவரும் நினைக்க, பானு பிரகாஷ் ரெட்டியின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, படக்குழுவினரின் வாதத்தை கேட்டது. அதில் படக்குழுவின் சார்பாக பேசிய வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், படத்தில் பயன்படுத்தப்பட்ட பெருமாள் பாடல் முழுவதுமாக நீக்கப்பட்டு உள்ளது. பாடலும் மாற்றி அமைக்கப்பட்டு அதற்கான தணிக்கை சான்றும் பெற அனுப்பப்பட்டு உள்ளது என வாதித்தார். இதனை கேட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பாடல் நீக்கிட்டிங்க ஆனால் பாடலின் டியூன் பயன்படுத்தப்பட்டு இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறதே என கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த பாடலின் ட்யூனை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது. இதே போல் மற்ற மதங்களின் பாடல்களை செய்ய உங்களுக்கு துணிவு உள்ளதா? எந்த மதத்தினரையும் மதங்களையும் அவதூறு செய்வதை நீதிமன்றத்தால் ஏற்க முடியாது.
ஆதலால் இப்படத்தில் இடம்பெறும் 'கோவிந்தா..கோவிந்தா' என்ற பாடலின் டியூனை மியூட் செய்ய வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து பாடலில் உள்ள சர்ச்சைக்குரிய வரிகள் தான் நீக்கம் செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அந்த பாடலையும் அதற்குண்டான காட்சிகள் முழுவதையும் படக்குழுவினர் நிக்கி உள்ளனர். இதனால் ரசிகர்கள் சற்று வேதனை அடைந்து உள்ளனர்.
இதையும் படிங்க: சந்தானத்தை மன்னிச்சிடுங்க பவன் கல்யாண்.. ப்ளீஸ்..! நண்பனுக்காக பேசிய கூல் சுரேஷ்..!