தமிழ் திரையுலகில் கதாநாயகர்கள் என்றால் அது ரஜினி, கமலஹாசன், விஜய், அஜித் என்பார்கள். அதுவே கதாநாயகிகள் என்றால் த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா என்பார்கள். இப்படி கதாநாயகனையும் கதாநாயகிகளையும் போற்றும் இந்த உலகம் காமெடி நட்சத்திரங்களை தன் உள்ளங்கையில் வைத்து தாங்குகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில், கதாநாயகர்கள் சண்டையிட்டு காதலித்து கரம் பிடித்து இதுதான் டா வாழ்க்கை என்று சொல்லிவிட்டு செல்வார்கள்.
ஆனால் அதற்குப் பின்பு துன்பத்தில் இருப்பவர்களையும் இன்பமாக்க பெரிதும் உழைத்து இருப்பது படத்தில் வரும் காமெடி கதாநாயகர்கள் தான். அவர்களை ஒரு நாளும் நாம் மறக்க முடியாது. அந்த வகையில் பார்த்தால் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை நாகேஷ், மனோரம்மா, செந்தில், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், சூரி, யோகி பாபு, கிங்ஸ்லி என அனைவரையும் சொல்லலாம்.

இதில் லேட்டஸ்டான காமெடியென்கள் என்று சொன்னால், லொள்ளு சபா மூலம் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம், பரோட்டா காமெடியின் மூலம் தமிழ் நாடையே திரும்பிப் பார்க்க வைத்த நடிகர் சூரி, ஆரம்பத்திலேயே தன்னை 'பன்னி மூஞ்சி வாயன்' என்று கலாய்க்க வைத்து இன்று நயன்தாராவுக்கே ஜோடியாக நடிக்கும் யோகி பாபு முதலானோர் தான். இப்படிப்பட்ட இவர்கள் மூன்று பேரும் பல படங்களில் காமெடி கதாநாயகர்களாக நடித்து இன்று பல படங்களில் கதாநாயகனாகவே மாறி மக்களின் ஆதரவை பெற்று வருகின்றனர். இப்படி இருக்கையில் இன்று இவர்கள் மூவரும் கதாநாயகனாக நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இருப்பது மக்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்டாக இருக்கிறது.
இதையும் படிங்க: ரஜினியின் அண்ணாத்தையா.. SK-வின் நம்ம வீட்டு பிள்ளையா.. சூரியின் 'மாமன்' படத்தை பார்த்து குழப்பத்தில் ரசிகர்கள்..!

அதன்படி பார்த்தால் நடிகர் சந்தானம் "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தையும், நடிகர் யோகி பாபுவின் "ஜோரா கைய தட்டுங்க" படத்தையும், நடிகர் சூரியன் பாசம் மிகுந்த "மாமன்" படத்தையும் மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த வேளையில், முதன் முதலாக நடிகர் சூரியின் எழுத்தில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ள திரைப்படம் தான் 'மாமன்' திரைப்படம். இத்திரைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ள நிலையில் படம் மிகுந்த பாசம் கலந்த கலவையாக உள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை குறித்து பார்த்தால், தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவை குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கைகளை குறித்தும், வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படம் உள்ளது என மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர். நன்றாக இருக்கும் அக்கா தம்பியின் உறவுகளுக்கு விரிசல் விட காரணமாய் அக்காவின் மகனே இருக்கிறார். ஆதலால் தனது தம்பியின் வாழ்க்கையை காப்பாற்ற தனது மகனையும் தம்பியையும் பிரிக்க அக்கா செய்யும் திட்டம் ட்யூஸ்ட்களிலேயே அல்டிமேட் ஆக இருந்தது.
ஆனாலும் படத்த்தில் பாசங்கள் சற்று அதிகமாகவே இருக்கிறது என்றும் சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. படத்தில் காமெடி என்பது துளி கூட இல்லை. சண்டைக் காட்சிகள் எதற்காக வைத்தார்கள் என்று தெரியவில்லை என ஒரு சில குறைகளை மக்கள் முன் வைத்து சென்றனர். சிலர் இது ரஜினியின் அண்ணாத்த திரைப்படமா? அல்லது சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படமா? என தெரியவில்லை என்று கூறி சென்றனர்.

இந்த நிலையில், ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் இப்படம் பெற வேண்டும் என்பதற்காகவும் இந்தப் படம் வெற்றி படமாக மாற வேண்டும் என்பதற்காகவும் சூரியன் ரசிகர்கள் செய்துள்ள செயல் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அந்த வகையில், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் நடிகர் சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் நடத்தி உள்ளனர் அவரது ரசிகர்கள் சிலர்.

இதனைப் பார்த்து அங்கு இருந்த பலரும் ஆச்சரியப்பட்ட வேளையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது ரசிகர் ஒருவர், "மாமன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாட வேண்டும். முதன்முதலாக எங்கள் அண்ணன் சூரி எழுதி நடித்து இருக்கும் இந்த படம் அவரது வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இருக்க வேண்டும். இதனை எல்லாம் மனதில் வைத்து தான் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனிடம் வந்து வேண்டி இருக்கிறோம்.

படம் வெற்றி அடைவதற்காகவே மண் சோறு சாப்பிட்டு வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறோம். படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் குடும்பத்துடன் சென்று அனைவரும் பாருங்கள். முருகன் துணை அண்ணனுக்கு இருக்கும் வரை அவருக்கு தோல்வியே இல்லை" என்று அவரது ரசிகர் மகிழ்ச்சியுடன் பேசி சென்றார்.
இதையும் படிங்க: ரஜினியின் அண்ணாத்தையா.. SK-வின் நம்ம வீட்டு பிள்ளையா.. சூரியின் 'மாமன்' படத்தை பார்த்து குழப்பத்தில் ரசிகர்கள்..!