நடிகர் விஜய் சினிமா துறையில் இருந்து விலகும் நேரத்தில், அவரது மகன் ஜேசன் சஞ்சய், சினிமா துறையில் தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் நடிகர் விஜயின் மகன் படத்தில் நடிக்கப் போகிறார் என அனைவரும் காத்தருந்த நிலையில், தற்பொழுது படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை ஆனால், படத்தை இயக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறி, லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சந்திப் கிஷன் நடிப்பில் பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய்.இந்த செய்திகள் காட்டு தீயாய் தமிழகம் முழுவதும் பரவ, படத்திற்கான அப்டேட்டை எப்பொழுது தருவார் எனக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த செய்திகள் ரசிகர்கள் மட்டுமல்லாது, நடிகர் அஜித்தின் காதுகளிலும் விழ, உடனே ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமல்லாது லைக்கா ஏதாவது குளறுபடி செய்தாலோ அல்லது தயாரிக்க முன் வராமல் இருந்தாலோ என்னிடம் சொல்லுங்கள். நீங்கள் இயக்கும் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று பேசியதாகவும் கூறப்படுகிறது. அதற்கும் காரணம் உண்டு எப்படி எனில் ஜேசன் சஞ்சய் தீவிரமான அஜித் ரசிகர் என்பது தான்.
இதையும் படிங்க: படம் என்னுது நடிப்பு உன்னுது..! ஆட்டத்தை ஆரம்பித்த நடிகர் விஜயின் மகன்..!

இந்த சூழலில், விஜயின் மகன் கடந்த இரண்டு மாதங்களாக இப்படத்தை தயாரித்து வருகிறார். மேலும், சமீபத்தில் சந்தீப் கிஷனின் பிறந்த நாளில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். இதனை அடுத்து, இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.25 கோடி. ஆனாலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என பலர் கூறினாலும், முதல் காப்பி என்ற அடிப்படையில் இந்த படத்தை தன்னுடைய "ஜேசன் சஞ்சய் ஜோசப் மீடியா என்டர்டைன்மென்ட்" என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார் ஜேசன் சஞ்சய்.

அந்த வகையில் ஜேசன் சஞ்சய் இந்த படத்தில் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க: முதல் முறையாக இளையராஜாவை புகழும் ரசிகர்கள்..! ராணுவத்திற்கு என்ன கொடுத்திருக்கிறார் தெரியுமா..!