பாகிஸ்தான் நடத்திவரும் மோசமான தாக்குதல்களை இந்திய ராணுவம் விழிப்புடன் இருந்து முறியடித்து வருகிறது. "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே மாதம் 7ம் தேதி நடத்தப்பட்ட இந்தியாவின் அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவித்தது. இந்த தாக்குதலை பற்றி குறிப்பிடுகையில் 9 இடங்கள் தாக்கப்பட்டது.

இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் இரவு நேரத்தில் பாகிஸ்தான் ட்ரோன்கள் அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இந்த மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மோசமான சூழல் உருவாகி வருகிறது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை அடுத்து, இந்தியாவில் உள்ள பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன.
இதையும் படிங்க: ரொம்ப வொர்ஸ்ட்..! ஊத்தி மூடிய கரூர் இளையராஜா கச்சேரி..!

ஆனால் இந்திய விமானப்படை அதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் தகுந்த பதிலடி கொடுத்து, பாகிஸ்தான் ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய ராணுவம் உடனே, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இப்படியான இந்த பதற்றமான சூழலில் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வண்ணம் ஐடி ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் முதல் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், மூன்றாவது நாளாக இன்று நள்ளிரவில் மீண்டும் பாகிஸ்தான் தனது ட்ரோன்களை வைத்து காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து தனது தாக்குதலை நடத்தியது. இதனை சுதாரித்த இந்திய ராணுவம் தனது வான்வழி தாக்குதலால் அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியது. மேலும், ஜம்மு காஷ்மீர் எல்லையில் எதிரி படைகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த ஆந்திரப்பிரதேஷ் மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், சுல்லி தண்டாவைச் சேர்ந்த முரளி நாயக்கின் தியாகம் தற்பொழுது அனைத்து இந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த சூழலில், இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தளத்தில் " 'வீரம்' - இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் எனது முதல் சிம்பொனியை இசையமைத்து, அதற்கு "வேலியண்ட்" என்று பெயரிட்டேன், மே மாதத்தில் நமது உண்மையான ஹீரோக்கள், நமது வீரர்கள் வீரம், தைரியம், தைரியம், துல்லியம் மற்றும் உறுதியுடன் எல்லைகளில் செயல்பட வேண்டும், பஹல்காமில் உள்ள அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் கொடூரமான கொலைகளை எதிர்க்க வேண்டும். ஜெய பெரிகை கொட்டடா, கொட்டடா, ஜெய பெரிகை கொட்டடா - பாரதி ஒரு பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது எல்லைகள் மற்றும் மக்களைப் பாதுகாப்பதற்கும், நமது நாட்டின் துணிச்சலான மாவீரர்களின் "தீரமான" முயற்சிகளுக்காக, "தேசிய பாதுகாப்பு நிதிக்கு" எனது கச்சேரிக் கட்டணம் மற்றும் ஒரு மாதச் சம்பளத்தை ஒரு சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்" என தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், தனது ஒரு மாத சம்பளத்தையும் தான் நடத்தும் கச்சேரியில் வரும் வருமானத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு இசை தெரியாது ஆனால் இசைக்கு என்னை தெரியும்..! இளையராஜாவின் மாஸ் ஸ்பீச்..!