தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், அஜித், விஷ்ணு விஷால், சித்தார்த், நகுல், ஜீவா, ஆர்யா, ஜெய், சந்தானம் என பல நடிகர்கள் இருந்தாலும் ஒருவருடைய படம் மட்டும் வெளியாகிறது என்றால் மொத்த தமிழ்நாட்டு மக்களுமே திரும்பி பார்ப்பர். அந்த அளவிற்கு டைட்டிலில் ஃபேமஸ் ஆனவர் தான் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி.

இவரது பேச்சிலும் ஒவ்வொரு அசைவிலும் பல உதாரணங்களை வைத்திருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே. இன்று தமிழ் திரை உலகில் நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டு செயல்பட்டு வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இந்த சூழலில், அவரது திரைப்படங்களின் பெயர்களை பார்த்தால் சற்று அபூர்வமாகவே இருக்கும் அந்த வகையில் சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், ரத்தம், ஹிட்லர் என தனது படங்களின் பெயரிலேயே வித்தியாசத்தை காண்பித்து இருப்பார் விஜய் ஆண்டனி. ஆனால் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு கருத்தை மையமாக வைத்து நடித்திருப்பார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
இதையும் படிங்க: அரசியல் செய்ய தனி அறிவு வேண்டும்.. அதெல்லாம்.. நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு பேச்சு..!

இப்படி இருக்க தற்பொழுது மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்து தற்பொழுது இயக்குனராக மாறி இருக்கும் லியோ ஜான் பால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க க்ரைம் திரில்லர் படமாகவே உருவாக்கப்பட்ட இப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி அனைத்து திரையரங்கிலும் வெளியானது.

மேலும், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான பொழுது பலரது கவனத்தையும் ஈர்த்தது, அதில் விஜய் ஆண்டனி, டெவில் வெளிய வர பார்க்கும் என சொல்ல, எடிட்டிங் அற்புதமாக இருந்தது. மேலும் இதுவரை சைக்கோ கில்லர் என்று பார்த்தால் கடத்தி கொடூரமாக கொலை செய்யும் படங்களை போல் இப்படம் அல்லாமல் சற்று வித்தியாசமாக உடலை கருக வைத்து கொலைசெய்யும் சைக்கோ வில்லன் படமாக தெரிகிறது. இப்படி பட்ட சைக்கோ வில்லனை கண்டுபிடிக்க களமிறங்கும் விஜய் ஆண்டனியும் அந்த கிரிமினலால் பாதிக்கப்படுகிறார். பின் பல போராட்டங்களுக்கு பின் சைக்கோவின் வாயிலேயே உண்மையை வர வைக்கும் விதமாக படத்தின் ட்ரெய்லர் இருந்தது.

இந்த நிலையில், தற்பொழுது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த நேரத்தில் மார்கன் படத்தின் 'ஸ்னீக் பிக்' காட்சி வெளியாகி உள்ளது. அதில் " ஒருவரை சிடி ஸ்கேனரில் படுக்க வைத்து டாக்டர் உங்களுக்கு ஒரு வயதில் நடந்த நினைவுகள் ஏதாவது தெரிகிறதா என கேட்க, தான் குழந்தையாக இருந்த பொழுது ஒரு கோவிலில் உள்ள கிணற்றில் குதித்த நிகழ்வை அழகாக தெரிவித்து இருப்பார். இதனை பார்த்து விஜய் ஆண்டனியும் டாக்டரும் ஷாக் ஆகும் வகையில் இந்த 'ஸ்னீக் பிக்' காட்சிகள் இருக்கின்றன.
இதையும் படிங்க: திகில் கிளப்பும் விஜய் ஆண்டனியின் "மார்கன்"..! படத்தின் முதல் 6 நிமிட வீடியோவால் அரண்டு போன ரசிகர்கள்..!