தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான கதைக்களங்களால் பெயர் பெற்ற நடிகராக விக்ரம் பிரபு விளங்குகிறார். சமீபத்தில் அவர் நடித்த திரைப்படமான ‘லவ் மேரேஜ்’ ரசிகர்களிடம் ஒரு புதிய பார்வையை ஏற்படுத்தியிருக்கிறது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இப்படத்தின் மூலம் தனது இயக்கத் திறமையை முதன்முறையாக வெளிப்படுத்திள்ளார். படம் வெளியான பின்பும், அதன் மீதான விமர்சனங்கள், பாராட்டுகள் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘லவ் மேரேஜ்’ திரைப்படம், நம்முடைய சமூகத்தில் பரவலாக காணப்படும் ஒரு உண்மைச் சூழ்நிலையை மையமாகக் கொண்டுள்ளது.
வயதாகி விட்டாலும் திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் பலரைச் சுற்றி ஏற்படும் சமூக அழுத்தங்கள், குடும்ப மன அழுத்தம், தனிமை, நியாயங்களற்ற குற்றச்சாட்டுகள் போன்றவை இப்படத்தின் கதையின் பிரதான திசையாக இருக்கின்றன. விக்ரம் பிரபு இப்படத்தில் அந்த மன அழுத்தத்திலும், கண்ணோட்ட மாற்றத்திலும் சிக்கிய ஒரு நவீன இளைஞராக மிக நம்பகமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளாரும், மிகுந்த இயல்புடன் தனது கதாபாத்திரத்தில் பதிந்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் தங்கள் திறமையை வெளிக் காட்டியள்ளனர். குறிப்பாக சத்யராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், அவரின் அனுபவம் மற்றும் உடைந்தும் எழுந்த பாத்திரத்துடன் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அவரது இசை, படத்தின் உணர்வுகளை இன்னும் வலுப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. காதலிலும், கல்யாண வாழ்க்கையிலும் வரும் பதட்டங்கள், எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவற்றில் இசை உணர்வை ஊட்டுகிறது. பின்னணி இசையும், பாடல்களும் பாராட்டைப் பெற்றுள்ளன.

இப்படி இருக்க ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் தற்போது "அமேசான் பிரைம்" வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவெனில், இது இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள், குறிப்பாக விக்ரம் பிரபுவின் ரசிகர்கள், படத்தின் ஓடிடி வெளியீட்டை உடனடியாகக் காண முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த விவகாரம் பல்வேறு சினிமா பக்கங்களில் வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளதாலும், வெளியான சில நாடுகளில் நல்ல பார்வையாளர் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாலும், இந்தியாவிலும் விரைவில் வெளியிட வேண்டிய தேவை இருப்பதாக ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே இந்தியாவில் இப்படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பது தொடர்பாக அதிகார பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: வந்தாச்சு பிக்பாஸ் சீசன் - 9...! முதல் போட்டியாளரே சிக்கலான ஆளா இருக்காரே..!
இருப்பினும், படத்தின் ஒளிப்பதிவாளர், மற்றும் படக்குழுவினர் சமூக வலைதளங்களில் படத்திற்கு கிடைக்கும் வரவேற்புகள் பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இதனால், படத்தின் இந்திய வெளியீடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, ஓடிடி தளங்களில் வெளிவரும் திரைப்படங்கள், உலகளாவிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் பிராந்திய வாரியாக வெளியிடப்படுவதால், சில நேரங்களில் இந்த மாதிரியான தாமதங்கள் ஏற்படலாம். ‘லவ் மேரேஜ்’ ஒரு வெறும் காதல் படம் மட்டுமல்ல. அது சமூக விமர்சனம், தனிமையின் தாக்கம், மற்றும் அதிர்ச்சி தரும் நகைச்சுவை கலந்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நம்மை சுற்றி உள்ள குடும்பங்களின் மனநிலை, திருமணத்தை ஒரு கடமை என பார்ப்பது, அதைச் சுற்றி விளையும் கலப்பை, வெளி அழுத்தங்களை இப்படம் தெளிவாக சித்தரிக்கிறது. ஆகேவ ‘லவ் மேரேஜ்’ திரைப்படம், இன்றைய தலைமுறையின் அவசியமான மற்றும் உண்மை தழுவிய சிந்தனையை பிரதிபலிக்கும் படைப்பு. விக்ரம் பிரபுவின் மாறுபட்ட நடிப்பு தேர்வுகள், இயக்குநர் சண்முக பிரியனின் திறமையான கதைநயமும் இந்த படத்தை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளன.

படம் தற்போது இந்தியாவுக்கு வெளியே அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்களும் விரைவில் அனுபவிக்கத் தயாராக இருக்கின்றனர்.
இதையும் படிங்க: அப்படி என்ன உங்களுக்கு ஈகோ.. கோலிவுட் ஹீரோயின்களை பார்த்தா எப்படி தெரியுது - பவித்ரா மேனன் கண்டனம்..!