சென்னையின் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரவு விடுதியில் கடந்த மே 22ஆம் தேதியன்று மது அருந்தச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் ஒரு வழக்கில் ஒருவரும் இரண்டாவது வழக்கில் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரதீப்குமார், கானா நாட்டைச் சேர்ந்த ஜான், பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, போதைப்பொருட்கள் வாங்கி, பயன்படுத்தி, விற்பனை செய்யும் கெவின் என்பவரும் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரிடம் கொகைகன் வாங்கியது தொடர்பாக ஜூன் 23ஆம் நாள் முழுக்க விசாரணை நடத்திய நுங்கம்பாக்கம் போலீசார், அவரது வீட்டிலும் தீவிர சோதனை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அரசு மருத்துவமனையில் போதைப் பொருள் சோதனைக்கு உட்படுத்தியது. அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், கைதுசெய்யப்பட்டு அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல் கிருஷ்ணாவும் கெவின் என்பவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அவரையும் போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். அதன்பின் நிபந்தனை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தனர். இதற்கிடையே போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதையும் படிங்க: 'ஆச்சி' மனோரமாவின் மகன் பூபதி இன்று காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!
இந்நிலையில் இருவரும் இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்ததுறை சம்மன் அனுப்பி உள்ளது. ஸ்ரீகாந்த் வரும் 28ஆம் தேதியும் கிருஷ்ணா வரும் 29ஆம் தேதியும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. போதை வழக்கில் ஏற்கனவே பலர் கைதாகி உள்ள நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்க அமலாக்கத்ததுறை முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: நெட்பிளிக்ஸ்'ன் 'Famous Last Words': பிரபலங்களின் இறுதி வார்த்தைகளைப் பகிரும் புதிய தொடர்..!!