தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராகவும், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருக்கும் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் பல சிக்கல்களுக்குப் பிறகு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த அரசியல் ஆக்ஷன் திரைப்படம், விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், விஜய்யின் திரைப்படப் பயணத்துக்கு ஒரு பிரமாண்டமான முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் உருவாக்கம் முதல் வெளியீடு வரை பல சவால்களை எதிர்கொண்டது. முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த ஜனநாயகன், சென்சார் தணிக்கை காரணமாக தாமதமானது. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பல மாதங்களாக ரசிகர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தச் சிக்கல் படக்குழுவுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், சமீபத்தில் படத்துக்கு 'A' சான்றிதழ் கிடைத்ததால், வெளியீட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சான்றிதழ் பெறப்பட்டது படக்குழுவினருக்கு பெரும் நிம்மதியைத் தந்தது.

வெளிநாடுகளில் ஜனநாயகன் ஜூலை 24ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கெனவே முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. வெளிநாடுகளில் ஜூலை 24ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தமிழகத்தில் எப்போது வெளிகடப்படும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதையும் படிங்க: ஜனநாயகன் இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜின் 'DC'..!! ஆக்ஷன் படத்துக்கு சென்சார் போர்டு கொடுத்த Certificate-அ பாருங்க..!
முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் மூவாயிரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 950 திரையரங்குகளில் படத்தை திரையிட திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்தில் காத்திருக்கின்றனர். ஜூலை இருவத்தி மூன்றாம் தேதியை திருவிழா போல கொண்டாட காத்துள்ளனர். தளபதியை இது போல் இனிமேல் திரையரங்குகளில் காண முடியாது என்றும் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அக்கா திருமணத்தில் தேவதை போல ஜொலித்த பாடகி பிரகதி..!! இணையத்தில் வைரலாகும் அழகிய போட்டோஸ்..!