தமிழ் திரையுலகில் எதிரும், புதிருமாக இருந்த விஜய், அஜித் ரசிகர்கள் கூட இப்போது சமாதானம் ஆகிவிட்டார்கள். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து அரசியலில் காலடி எடுத்து வைத்ததற்கு முதல் ஆளாக வாழ்த்தியதும், போஸ்டர் ஒட்டி கொண்டாடியதும் அஜித் ரசிகர்கள் தான். அதேபோல் சமீபத்தில் திரைக்கு வந்த அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வேண்டும் என சோசியல் மீடியாக்களில் விஜய் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இப்படி இரண்டாம் தலைமுறை நடிகர்களின் ரசிகர்களே சைலண்டாக போய்க் கொண்டிருக்கும் போது, திரையுலகில் நண்பர்களாக வலம் வரும் ரஜினி, கமல் ரசிகர்கள் திடீரென சோசியல் மீடியாவுக்குள் புகுந்து சண்டையிட்டு வருகின்றனர்.

தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருந்த நடிகர் கமல்ஹாசன், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கமல் ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர், கன்னட உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தின. ஆனால் தான் பேசியது வரலாற்று ரீதியில் சரியானது என்பதால் மன்னிப்பு கேட்க மறுத்த கமல் ஹாசன், "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் கமல் ஹாசனுக்கு ஆதரவாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் கூட ஆதரவு குரல் கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க: ஒரே பதிவில் ரஜினியை கடுப்பாக்கிய ப்ளூ சட்டை மாறன்..! கொதிக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

ஆனால் இந்த விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய் திறக்கவில்லை. அரசியல் வட்டாரங்களில் இருந்து கமல் ஹாசனுக்கு ஆதரவு வந்த போதும், பெரும்பாலான தமிழ் நடிகர் வாய் திறக்கவில்லை. குறிப்பாக கமல் ஹாசனின் நீண்ட நாள் நண்பரும், கர்நாடகாவைச் சேர்ந்தவருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விவகாரத்தில் மெளனம் சாதித்தது கமல் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அதனை தற்போது வைரலாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடியோ மூலம் கொட்டித்தீர்த்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடனமாடினார். தற்போது அதனை மீண்டும் வைரலாக்கி வரும் கமல் ரசிகர்கள், “கெத்து னா என்ன தெரியுமா? பணம் போனா போகட்டும் மன்னிப்பு கேட்க முடியாதுன்னு தில்லா நிற்கிறது. ஈனப் பொழைப்புனா என்ன தெரியுமா? அதே பணத்துக்காக பணக்காரன் வீட்ல போய் சரக்குப் போட்டுட்டு ஆடுறது” என தரக்குறைவான வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றனர். தனது ரசிகர்களுக்கு கமல் ஹாசன் கடிவாளம் போடுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
கெத்து னா என்ன தெரியுமா?
பணம் போனா போகட்டும் மன்னிப்பு கேட்க முடியாதுன்னு தில்லா நிற்கிறது..
ஈனப் பொழைப்புனா என்ன தெரியுமா? அதே பணத்துக்காக பணக்காரன் வீட்ல போய் சரக்குப் போட்டுட்டு ஆடுறது..
😜..#KamalHaasanMPpic.twitter.com/9k3DhSnDmd https://t.co/nXMQfJyH1C
— பாபு ஆறுமுகம் (@BabuArumugam5) June 14, 2025
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பிளான்... ரஜினியின் 'கூலி' படத்தில் அமீர்கான்.. கசிந்த உண்மை...!