கேரளாவை சேர்ந்தவர் நடிகை சுவாசிகா, எர்ணாகுளத்தில் உள்ள கீழில்லாம் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்.

டான்சரான இவர், அதை தொடர்ந்து மாடலிங் துறையில் கால் பதித்தார். கேரளாவில் சில டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழக்க துவங்கினார்.

இதையும் படிங்க: உங்களுக்கு அசிங்கமாகவே இல்லையா..! செல்போனில் 'மாமன்' படத்தை பாக்குறீங்க.. வெளுத்து வாங்கிய நடிகர் சூரி..!
அந்த சமயத்தில் தான் இவருக்கு தமிழ் மொழி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2009-ஆம் ஆண்டு, வெளியான வைகை படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, கண்டதும் கண்டதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சுவாசிக்கா அறிமுகமான போது இவருக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே அதிரடியாக மலையாளத்தில் ஒளிபரப்பான சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

அப்போது தான், தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் பிரேம் ஜாக்கோப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர், இவர் தமிழில் கெத்து தினேஷுக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் தான் லப்பர் பந்து.

இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான மாமன் படத்திலும் சூரிக்கு அக்காவாக நடித்திருந்தார். மாமன் - மருமகனுக்கு இடையே உள்ள அன்பை விளக்கும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் சுவாசிக்கா... மாடர்ன் உடையில் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: தியேட்டரில் படம் பாருங்க.. திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பார்க்காதீங்க..! சூரி காட்டம்..!