இசையுலகில் தனக்கென தனி இடம் பிடித்த இசையமைப்பாளர் சபேஷ் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு இசை உலகத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரைப்பட இசையின் பரந்த வானில், சில இசைக் கலைஞர்கள் தனித்து ஒளிர்கின்றனர். அவர்களில் சபேஷ்-முரளி என்ற இரட்டை இசையமைப்பாளர்கள், தங்கள் ஒருமித்த சிந்தனை மற்றும் இயல்பான இசைத்திறன் மூலம் தனி இடம்பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவரான சபேஷ், தனது சகோதரர் முரளியுடன் இணைந்து உருவாக்கிய இசைப் பயணம், தமிழ் சினிமாவின் கிராமிய முதல் நகர்ப்புற உணர்வுகள் வரை பரவியுள்ளது.
தேவாவின் இசைப் பயணம், சிறு வயதிலிருந்தே சபேஷ் மற்றும் முரளியை ஈர்த்தது. அவர்களின் வீடு, இசைக்கருவிகளின் ஒலிகளும், பாடல்களின் ராகங்கள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் இசை விவாதங்களின் மையமாகவும் இருந்தது.
சமுத்திரம், பொக்கிஷம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் ஆகிய படங்களில் சகோதரர் முரளியுடன் சபேஷ் இசையமைத்துள்ளார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களுக்கு சபேஸ் இசை அமைத்துள்ளார். மேலும்b பல்வேறு படங்களுக்கு பின்னணி இசை அமைத்த சபை திரைப்பட இசை அமைப்பாளர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர்களான சபைஷும் முரளியும் இணைந்து பல்வேறு படங்களுக்கு ஒன்றாக இசையமைத்துள்ளனர்.
இதையும் படிங்க: புலிக்கு பிறந்தது பூனையாகுமா..! அழகிலும் வேகத்திலும் அப்படியே தீபிகா படுகோனே-வை பிரதிபலிக்கும் மகள்..!
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்திருநகரில் இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர்களில் ஒருவரான 68 வயதான சபேஷ் உடல்நிலை குறைவால் காலமானார். சபேஷின் மறைவுக்கு இசைக் கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனா நடிக்கும் "The Girlfriend"..! டிரெய்லர் வெளியீடு குறித்த அப்டேட் இதோ..!