2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப் (Booth Slip) குறித்து முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. இதன்படி, இனி வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது. முன்பு பயன்பாட்டில் இருந்த புகைப்பட வாக்காளர் சீட்டு என்பது வாக்காளரின் புகைப்படத்துடன் கூடியதாக இருந்தது.
இது வாக்குச்சாவடி எண், வாக்காளர் வரிசை எண், தேர்தல் தேதி, நேரம் போன்ற அடிப்படை தகவல்களைத் தருவதோடு, சில சமயங்களில் அடையாள அங்கீகாரத்திற்கும் உதவியது. ஆனால், தற்போது தேர்தல் ஆணையம் இதை மாற்றி, வாக்காளர் தகவல் சீட்டு என்ற பெயரில் புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சீட்டில் வாக்காளரின் புகைப்படம் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, வாக்குச்சாவடி விவரங்கள், வாக்காளர் வரிசை எண், பகுதி எண், தேர்தல் தேதி, நேரம் போன்ற தகவல்கள் மட்டுமே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், QR குறியீடு சேர்க்கப்பட்டு, எளிதில் ஸ்கேன் செய்து விவரங்களை உறுதிப்படுத்தும் வசதியும் உள்ளது. சீட்டின் மேல் வலது மூலையில் வரிசை எண் மற்றும் பகுதி எண் பெரிய எழுத்தில் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளன, இதனால் வாக்குச்சாவடியை விரைவாகக் கண்டறிய முடியும்.
இதையும் படிங்க: தனித்து களமாடும் நாம் தமிழர்..! தேர்தல் அறிக்கையை வெளியிடும் சீமான்..!!
தமிழ்நாடு உட்பட அசாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நெருங்கிய தேர்தல்..! திமுக வேட்பாளர் தேர்வு தீவிரம்..! 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்..!!