தமிழ் திரையுலக நட்சத்திரங்களின் வாரிசுகள்... சினிமாவில் கால் பதிப்பது புதிய விஷயம் அல்ல.

அந்த வகையில், தன்னுடைய தாய் மற்றும் தந்தைக்கு பின்னர் 2016-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 'பென்சில்' திரைப்படம் மூலம் நடிகராக மாறியவர் ஷாரிக்.

இதையும் படிங்க: ஹீரோயின் அவதாரம் எடுக்கும் திவ்யா சத்யராஜ்! கலக்கல் ஹாட் போட்டோஸ்!
முதல் படத்திலேயே தன்னுடைய அப்பாவை போல் வில்லன் ரோலை தேர்வு செய்து நடித்தார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார்.

இந்த படம் இவருக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், ஷாரிகிற்கு எதிர்பார்த்த வண்ணம் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

கடைசியாக இவர் நடிப்பில் நேற்று இந்த நேரம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதை தவிர, ரிசார்ட் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

ஷாரிக் கடந்த ஆண்டு, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மரியாவுக்கு முதல் கணவர் மூலம், 11 வயது மகள் ஒருவரும் உள்ளார். மரியாவின் மகளையும் தன்னுடைய மகளாகவே பார்ப்பதாக ஷாரிக் மிகவும் உருக்கமாக பேட்டிகளில் பேசி இருந்தார்.

இந்த நிலையில் தான், மரியா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பும் செய்து அழகு பார்த்தனர் ரியாஸ் கான் மற்றும் உமா. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி, மரியாவுடன் ஷாரிக் எடுத்து கொண்டுள்ள ரொமான்டிக் போட்டோஸ் ஷூட் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பட்டு புடவை... வகுடில் குங்குமம்! மெய்சிலிர்க்கும் அழகில் ஷிவானி நாராயணன்!