நடிகர் சூர்யா தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கங்குவா படம் உலகளவில் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.
சூர்யா பல வெற்றிகரமான படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆசை, இயற்கை , சார்பட்டா பரம்பரை, துருவ நட்சத்திரம், வணங்கான் ஆகிய படங்களில் முதலில் சூர்யாவே நடிக்க இருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் வேறு நடிகர்கள் நடிக்க வேண்டியதாகி விட்ட்டது. இது அவரது கேரியரில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் படங்கள் சில சமயங்களில் சமூக அரசியல் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. ரெட்ரோ படம் சில சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாக எதிர்ப்பை சந்தித்தது. இது படத்தின் வரவேற்பை பாதித்தது. சூர்யாவின் பேச்சுகள், அறிக்கைகள் சில சமயங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவருக்கு எதிரான எதிர்மறை உணர்வுகளை உருவாக்கியுள்ளன.
இதையும் படிங்க: 'ரெட்ரோ'வை விஞ்சிய 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம்.. காட்சிகள் அதிகரிப்பால் படக்குழு குஷி.!!
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்று தொடர்ந்து வெற்றிகரமான படங்களை கொடுத்து வருகின்றனர். இதனால், சூர்யாவின் படங்கள் ஒப்பீட்டளவில் பின்னடைவை சந்திக்கின்றன. ஓடிடி தளங்கள், புதிய தலைமுறை ரசிகர்களின் ரசனை மாற்றங்களும் சூர்யாவின் படங்களின் வெற்றிக்கு சவாலாக உள்ளன.

சூர்யா தனது நடிப்புத் திறமை, மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதற்காக பாராட்டப்படுகிறார். நந்தா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், 24 போன்ற படங்கள் அவரது திறமையை நிரூபித்துள்ளன.
இந்நிலையில் திரைவிமர்சகர் ப்ளூசட்டை மாறன் சூர்யாவின் தோல்வி குறித்து, 16 வருடங்களாக தொடர் தோல்விகளை தந்து வரும் சூர்யா. அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக சூர்யா தந்த கடைசி தியேட்டரிக்கல் ஹிட் படம் சிங்கம் (2009). அதன்பிறகு இன்றுவரை சரியான கதையை தேர்வு செய்ய தெரியாமல் தோற்று வருகிறார். இதற்கு முக்கிய காரணம் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தராமல் இருப்பதே.
ஏற்கனவே ஜெயித்த இயக்குனர்கள் மீது சவாரி செய்தால் வெற்றி உறுதி என நம்புகிறார். ஆனால் அவர்கள் சொல்லி வைத்தாற்போல் இவருக்கு மட்டும் விபூதி அடித்து விடுகிறார்கள். ஜிகர்தண்டா Double X எனும் ஓடாத படத்திற்கு சக்ஸஸ் மீட் கொண்டாடி ஏமாற்றினார்கள். அதை நம்பி கார்த்திக் சுப்பராஜூக்கு வாய்ப்பு தந்தார். விளைவு... ரெட்ரோ பணால் ஆகிவிட்டது.

சிங்கத்திற்கு பிறகு ஒரே ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கூட தரமுடியாமல் 16 வருட ஃப்ளாப் பயணம் தொடர்கிறது. அடுத்து ஆர்.ஜே.பாலாஜியின் மாசானி அம்மன் கதை இவருக்கு கைகொடுக்குமா என தெரியவில்லை. தமிழ் ரசிகர்கள் உஷாராக இருப்பதை மிகத்தாமதமாக உணர்ந்த சூர்யா அடுத்ததாக.. வெங்கடேஷ் அட்லூரி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அது என்ன ஆகுமோ?

இனியாவது உருப்படியான கதைகளை தேர்வு செய்ய வேண்டும். புதிய இயக்குனர்களை நம்ப வேண்டும். பழைய டபரா செட்டுகளை மட்டுமே நம்பினால்.. விபூதி அடித்துக்கொண்டுதான் இருப்பார்கள். திரையில் இவரை பார்க்கும்போது கதாபாத்திரமா தெரியாமல்.. சூர்யாவாக மட்டுமே தெரிவது பெரிய மைனஸ். இந்த செயற்கை தனத்தையும் சரி செய்ய வேண்டும். பிதாமகன், காக்க காக்க போன்று நம்பகத்தன்மை கொண்ட மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'செல்தட்டி' குடும்பத்தின் 'சொல்தட்டிகள்...!' ஜோ- சூர்யாவின் ஆணிவேரை அறுத்த வாய்க்கொழுப்பு..!