இந்திய சினிமாவின் மிகவும் மக்கள்பிரிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கோவர்த்தன் அஸ்ரானி, தனது 84 வயதில் நேற்று (திங்கள்கிழமை - அக்டோபர் 20) மும்பையில் உயிரிழந்தார். நீண்ட நாட்களாக சுவாசக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த அவர், ஐந்து நாட்களுக்கு முன்பு ஜூபிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வப்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு இந்திய சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் 1941 ஜனவரி 1 அன்று சிந்தி இந்து குடும்பத்தில் பிறந்த அஸ்ரானி, தனது குழந்தைப் பருவத்தில் வணிகத்தில் ஆர்வம் இல்லாமல், நடிப்பு துறையில் மனதைத் திசைத்திருந்தார். இவர் ஆல் இந்தியா ரேடியோவில் வாய்ஸ் ஆர்டிஸ்ட்டாகப் பணியாற்றினார். 1962இல் மும்பை வந்து, 1964இல் பூனாவில் உள்ள ஃபிலிம் அண்ட் டிவி இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவில் (எஃப்டிடிஐ) நடிப்பு பயிற்சி பெற்றார். 1967இல் தனது முதல் இந்தி திரைப்படமான ஹேர் காஞ்ச் கி சூடியன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதையும் படிங்க: 'வெந்து தணிந்தது காடு' பட ஹீரோயினா இது..! சுடிதாரில் சொக்க வைக்கும் நடிகை சித்தி இத்னானி..!
அஸ்ரானியின் தொழில் வாழ்க்கை ஐந்து தசாபங்களுக்கு மேல் விரிந்தது. 350க்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் நடித்த அவர், குஜராத்தி சினிமாவிலும் முக்கிய இடம்பெற்றார். 1970களில் ஹிரிஷிகேஷ் முகர்ஜி, குல்ஜார், பி.ஆர். சோப்ரா போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை அளித்தார். ராஜேஷ் கண்ணா, அமிதாப் பச்சன், ஷிர்மி போன்ற நடிகர்களுடன் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக, 1975இல் வெளியான ஷோலேயில் ஜெயிலர் ரோலில் நடித்தது அவரது தசரத்மான நடிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. "க்யா ரே, ஆங்க்ரேஜோன் கே ஜமானே கே ஜெய்லர்..." என்ற அவரது இன்னிங்ஸ் இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் பதிந்துள்ளது.
ஆஜ் கி தாஜா கபர் (1973), பட்டி பத்த்னி ஆர் வோ (1978), சூப்சூப்கே (1975), ஹெரா பெரி (2000), பூல் புலையா (2007) போன்ற படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு தனித்துவமானது. 1974இல் ஆஜ் கி தாஜா கபர்க்கும், 1977இல் பாலிகா பாதுக்கும் பிலிம்ஃபேர் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதுகளைப் பெற்றார். அவர் இயக்கிய சலா முராரி ஹீரோ பன்னே (1977), சலாம் மெம்சாப் (1979) போன்ற படங்களும் வெற்றி பெற்றன. குஜராத்தி திரைப்படங்களில் லீட் ஹீரோவாகவும், இயக்குநராகவும் பல வெற்றிகளைத் தொட்டார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன், கரீனா காபூர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். "அவரது சிரிப்பு இந்திய சினிமாவின் அழியாத பொக்கிஷம்" என அமிதாப் பச்சன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது உடல் இன்று மும்பையில் உள்ள சாண்டாகுரூஸ் தகனக் கூடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளன.
அஸ்ரானியின் மறைவு, இந்தியாவின் சிரிப்பு பாரம்பரியத்துக்கு ஒரு பெரிய இழப்பாக அமைந்துள்ளது. அவரது படங்கள் தலைமுறைகளை சிரிக்க வைக்கும் என்பது உறுதி..!!
இதையும் படிங்க: இப்படி அழகால் அடித்தால் என்ன செய்ய..! சிரிப்பால் மயக்கும் நடிகை ருக்மணி வசந்த்..!