அதாவது, நாட்டு வைத்தியம் செய்யும் பாட்டியை வர வைத்து பரணிக்கு கட்டு போட வைத்த நிலையில், பாட்டி மூணு நாளைக்கு கையை அசைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு செல்கிறார்.
பரணி நீ வேணும்னு தான் இப்படி பண்ண என்று சண்முகத்திடம் சண்டையிட, சண்முகம் கண்டிப்பா உன்னை அமெரிக்கா அனுப்பி வைப்பேன் என்று உறுதி அளிக்கிறான்.
இதனை தொடர்ந்து கரண்ட் கட்டாக பரணி தூக்கத்தில் இருந்து எழுந்து... இதுக்கும் காரணம் நீ தான் என்று வம்பிழுக்க சண்முகம் கரண்ட் கட் ஆனதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன் என்று கேட்கிறான். மேலும் பரணிக்காக விசிறி விடுகிறான்.
இதையும் படிங்க: Anna Serial: மறைக்கப்பட்ட உண்மை.. இசக்கியின் முடிவுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

இடையில் பாத்ரூம் செல்ல பரணி எழுந்து கொள்ள சண்முகம் அப்போதும் தூங்கி கொண்டே விசிறியபடி இருக்க பரணிக்கு சண்முகத்தின் காதலை புரிந்து கொள்ள தொடங்குகிறாள். அடுத்த நாள் காலையில் இங்கே சௌந்தரபாண்டி வீட்டில் இசக்கி முத்துபாண்டியின் ஷூவை துடைத்து கொண்டிருக்க அதை பார்த்து முத்துபாண்டி இதெல்லாம் நீ எதுக்கு செய்யுற என்று பாசமாக திட்டுகிறான்.
பிறகு பாக்கியம் காபி கொண்டு வரும் போது மயங்கி விழ முத்துபாண்டியும் இசக்கியும் பதறுகின்றனர், இங்கே சண்முகம் எழுந்து கோலம் போட தங்கைகள் வேடிக்கை பார்த்து சிரிக்க என் பொண்டாட்டிக்காக நான் செய்யுறேன் என்று சமாளிக்கிறான்.
ரத்னா காபி போட்டு வந்து எல்லாருக்கும் கொடுக்க பரணி குடிக்க போக சண்முகம் நிறுத்துங்க என்று சொல்லி தடுத்து நிறுத்துகிறான், நீ உளுந்தம் கஞ்சி தான் குடிக்கணும் என்று சொல்லி குடிக்க வைக்கிறான். அடுத்து பரணி ரெஸ்ட் எடுக்க, அப்போது சண்முகம் அப்பாவுடன் சேர்ந்து பரணியின் துணிகளை துவைத்து காயப் போட இதை பார்த்த அவள் இதெல்லாம் எதுக்கு பண்றீங்க என்று கேட்கிறாள். சண்முகம் நீ அமெரிக்காவுக்கு எடுத்துட்டு போகணும்ல என்று பதில் சொல்கிறான்.

பிறகு சௌந்தரபாண்டி, பாக்கியம் ஆகியோர் பரணியை பார்க்க வருகின்றனர், பாக்கியம் ஜூஸ் வாங்கி வந்திருப்பதாக சொல்லி கொடுக்க சண்முகம் தடுத்து நிறுத்தி மீண்டும் உளுத்தம் கஞ்சி கொடுக்கிறான். சௌந்தரபாண்டி இவனை எல்லாம் நம்பாதே நம்ப வீட்டிற்கு வந்துடு என்று கூப்பிட பரணி சண்முகம் ரொம்ப நல்லா பார்த்துப்பதாக சொல்கிறாள். சௌந்தரபாண்டி இதை கேட்டு அதிர்ச்சியாக பாக்கியம் சந்தோசம் அடைகிறாள்.
மேலும் தான் வாங்கி வந்த சூட்கேஸை கொடுத்து அமெரிக்கா போகணும் என்பதை நியாபகப்படுத்தி விட்டு கிளம்புகிறார். சண்முகம் பரணியை குளிக்க வைத்து, அவளுக்கு சாம்பிராணி போட்டு விட்டு அக்கறையாக பார்த்து கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Anna Serial: சண்முகத்தை மீறி சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி சென்ற இசக்கி; காரணம் என்ன?