அதாவது நேற்று சூட்கேஸை வாங்கி வந்து பரணிக்கு அமெரிக்கா போக வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தி விட்டு, சொந்தரபாண்டி சென்ற நிலையில்... இன்றைய தினம் ரத்னா அறிவழகனிடம் பேசி கொண்டிருப்பதை பார்த்து, வெங்கடேஷ் இவனுக்காக தானே என்னை வேண்டாம்னு தூக்கி போட்ட என்று கடுப்பாகிறான்.
அறிவழகன் கிளம்பியதும் வெங்கடேஷ் ரத்னாவிடம் பிரச்சனை செய்து அவளது புடவையை தொடப் போக பக்கத்தில் இருந்த கனி வெங்கடேஷ் கையை பிடித்து கடித்து விடுகிறாள், வெங்கடேஷ் கனியை அங்கிருந்து கடத்தி செல்கிறான்.

ரத்னா வீட்டிற்கு ஓடி வருகிறாள், ஷண்முகம் இல்லாத நிலையில் போன் போட்டு அண்ணனுக்கும் முத்துபாண்டிக்கும் விஷயத்தை சொல்ல இருவரும் பயங்கர கோபத்தில் கிளம்பி செல்கின்றனர். அப்போது கௌதம் ஒரு பெண்ணை கடத்தி செல்வதை பார்த்து வெங்கடேஷிடம் சண்டையிட வெங்கடேஷ் கௌதமை அடித்து துவைத்து எடுக்கிறான்.
இதையும் படிங்க: Anna Serial: மயங்கி விழுந்த பாக்கியம் - சௌந்தரபாண்டிக்கு பரணி கொடுத்த ஷாக்!
அங்கு வந்த சண்முகம் முத்துப்பாண்டி வெங்கடேஷை அடித்து ஓட விடுகின்றனர். வீரா மற்றும் சண்முகத்திற்கு கனியை காப்பாற்ற முயற்சி செய்த கௌதம் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படுகிறது. அடுத்து கௌதம் வீட்டிற்கு வர அங்கு வெங்கடேஷ் காத்திருக்கிறான்.

இவை அனைத்தும் வைஜெயந்தியின் திட்டம் தான் என்பது தெரிய வருகிறது. வெங்கடேஷ்... அறிவழகன் வெளியே வராதபடி அவனை பிடித்து உள்ளே போடணும் என்று உதவி கேட்கிறான். கௌதம் வீராவை காதலித்து திருமணம் செய்யணும் என்று வைஜெயந்தி சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன? என்று யூகிக்க முடியாத கதைக்களத்தில் இந்த தொடர் நகர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: Anna Serial: மறைக்கப்பட்ட உண்மை.. இசக்கியின் முடிவுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?