அதாவது, பரணிக்கு நாட்டு வைத்திய பாட்டி சொன்னது போல மூன்று நாளில் கை சரியாகி விடுகிறது. அமெரிக்கா செல்ல தேவையான விசாவும் வந்து விடுகிறது. சண்முகம் அமெரிக்கா போவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல என்று சொல்லி விடுகிறான்.
இதையடுத்து அடுத்த நாள் காலையில் பரணி அமெரிக்கா கிளம்ப எல்லோரும் அவளை வழி அனுப்ப தயாராகின்றனர். சண்முகம் கண்டிப்பா அமெரிக்கா போக கூடாதுன்னு இந்த யாகத்தை செய்யல.. நீ அமெரிக்கா போகணும்னு தான் செய்தேன் என்று சொல்கிறான். பரணி சண்முகத்தின் மனதை புரிந்து கொள்கிறாள்.

பரணியுடன் எல்லோரும் ஏர்போர்ட் கிளம்ப சண்முகம் நான் வரல நீங்க போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு கிளம்புகிறான். பரணி நீ போகாத பரணின்னு ஒரு வார்த்தை சொல்லு நான் போக மாட்டேன் என மனதிற்குள் நினைத்துக் கொள்ள, அதே போல் சண்முகம் நான் போல நீ ஒரு வார்த்தை சொல்லு பரணி என்று மனதில் நினைத்து கொள்கிறான் சண்முகம்.
இதையும் படிங்க: Anna Serial: கடத்தப்படும் கனி..! காதல் வலையில் சிக்கிய வீரா? அண்ணா சீரியல் அப்டேட்!
ஆனால் இருவரும் மனதுக்குள் இருக்கும் காதலை சொல்லாமல் மௌனம் காக்க... பரணி ஏர்போர்ட் கிளம்பி செல்கிறாள். சண்முகம் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைகிறாள். பரணி பீல் செய்வதை பார்த்த சௌந்தரபாண்டி நீ உள்ள போ என ஏர்போர்ட்டுக்குள் அனுப்பி வைத்து விடுகிறார்.

பரணியும் சண்முகம் வர மாட்டானா என்ற ஏக்கத்துடன் உள்ளே செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது பற்றி நாளை பார்க்கலாம்.
இதையும் படிங்க: Anna Serial: மயங்கி விழுந்த பாக்கியம் - சௌந்தரபாண்டிக்கு பரணி கொடுத்த ஷாக்!