அதாவது, கார்த்தி மற்றும் ராஜராஜன் ஆகியோர் ஒன்று சேர்ந்து யாக பூஜையில் கலந்து கொள்கின்றனர். மீண்டும் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் துரை இந்த ஊர்ல நான் தான் ராஜா.. நான் சொல்ற மாதிரி இங்க எல்லாம் நடக்கணும். இல்லனா தூக்கி உள்ள வச்சிடுவேன் என்று மிரட்டுகிறான்.
இந்த சமயத்தில் அங்கு வந்த ஐ.ஜி என்னயா பண்ணிட்டு இருக்க என்று திட்டி வார்னிங் கொடுத்து துரத்தி விடுகிறார். பிறகு இன்ஸ்பெக்டர் துரை சிவனாண்டியை சந்தித்து எனக்கு என்னமோ அந்த ராஜா சாதாரண ட்ரைவர் மாதிரி தெரியல என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்கிறான்.
இதையும் படிங்க: Karthigai Deepam: கைது செய்யப்படும் ராஜராஜன்; பூஜையில் காத்திருந்த அதிர்ச்சி..!

அடுத்து யாக பூஜை நல்லபடியாக நடந்து முடிந்ததும் வீட்டிற்கு வந்த சாமுண்டீஸ்வரி உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தப்போ அந்த ராஜசேதுபதி வந்து நிற்கல என்று சத்தம் போட ராஜராஜன் அவளை சமாதானம் செய்கிறான்.
அதனை தொடர்ந்து ரோகினி நீங்க செய்யுறது எல்லாம் சரியே இல்ல.. எனக்கு ரத்தம் கொடுத்தவங்களை நான் பார்க்கணும் என்று சத்தம் போட மயில்வாகனம் ராஜாவுக்கு தான் அவங்களை தெரியும் என்று சொல்கிறான், அடுத்த நாள் கார்த்தி ரோஹிணியை கோவிலுக்கு அழைத்து வர ரத்தம் கொடுத்து காப்பாற்றியது பாட்டி பரமேஸ்வரி தான் என்று அறிந்து கொள்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை ஏமாற்றிய கார்த்தி! உயிர் பிழைத்த ரோகினி - கார்த்திகை அப்டேட்!