அதாவது கோவில் திருவிழாவில் எல்லோரும் கார்த்திக் மற்றும் ரேவதியை சாப்பாடு ஊட்டி விட சொல்ல இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொள்கின்றனர்.
அதன் பிறகு ரேவதி தெருவுக்குச் சென்றுவிட சாமுண்டீஸ்வரிக்கு ஒரு போன் கால் வருகிறது. சாமுண்டீஸ்வரி மகேஷ் பத்தி பேச ரேவதி இதை ஒட்டி கேட்டு விடுகிறாள். அதன்பிறகு சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் காரில் ஏறி அவளுடன் மகேஷ் இருக்கும் இடத்திற்கு வருகிறாள்.

மகேசை கடத்தியது சாமுண்டீஸ்வரி தான் என்ற உண்மை தெரியவர, டிரைவர் ராஜாவை தப்பா நினைச்சுட்டோம் என்று வருத்தப்படுகிறாள். சாமுண்டீஸ்வரி நாளைக்கு உன்னை விட்டுடுவேன் ஒழுங்கா சாப்பிடு என்று மிரட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறாள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: உச்சகட்ட கோபத்தில் சாமுண்டீஸ்வரி...! சிவனாண்டிக்கு வந்த வார்னிங்?
அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் சாமுண்டீஸ்வரி, வீட்டில் நிறைய பணத்தை பதுக்கி வைத்திருக்கிறதா தகவல் இருப்பதாக சொல்லி வருமான வரித்துறையினர் சோதனை செய்ய வருகின்றனர். சந்திரகலா அக்கா மாட்டிக்கிட்டா இந்த திருவிழா நடக்காது என சந்தோஷப்படுகிறாள். பிறகு வருமான வரித்துறையில் வீடு முழுக்க சோதனை போட இடைப்பட்ட கேப்பில் ரேவதி மகேஷை தேடி குடோனுக்கு வருகிறாள்.

வீட்டில் சோதனை முடிந்து பணம் எதுவும் இல்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் கிளம்பிச் செல்ல சந்திரகலா ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: கைது செய்யப்படும் ராஜராஜன்; பூஜையில் காத்திருந்த அதிர்ச்சி..!