அதாவது, ரேவதிக்கு தாலி பிரித்து கோர்ப்பதற்கான நிகழ்ச்சி நடக்க, அவளும் எந்த பிரச்னையும் செய்யாமல் நிகழ்ச்சியில் அமைதியாக கலந்து கொள்கிறாள். இதனால் இந்த நிகழ்ச்சி எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக நடந்து முடிகிறது.
அடுத்ததாக கார்த்திக் கொஞ்சம் பணத்தை சேர்த்து வைத்திருப்பதாக சொல்ல சாமுண்டீஸ்வரி செங்கல் சூளையில் வேலை செய்பவர்களுக்கு நீங்களே பணத்தை கொடுத்துடுங்க என்று சொல்கிறாள். அடுத்து சந்திரகலாவின் ஆளான செங்கல் சூலை மேனேஜர் சம்பளத்தில் கொஞ்சம் பணத்தை பிடித்து கொண்டு தருவது கார்த்திக்கு தெரிய வருகிறது.

உடனே அவன் வேலையாள் போல் மாறி மேனேஜரிடம் முழு சம்பளத்தை கேட்டு சத்தம் போடுகிறான். ஒரு கட்டத்தில் மேனேஜரை அடித்து விட அவன் சாமுண்டீஸ்வரியிடம் கார்த்தி தன்னை அறைந்து விட்டதாக சொல்லி முறையிடுகிறான்.
இதையும் படிங்க: அமெரிக்கா கிளம்பிய பரணி! காதலை சொல்வானா ஷண்முகம்? - அண்ணா சீரியல் அப்டேட்!
மயில்வாகனம் கார்த்தி மீது தவறில்லை என நடந்ததை வீடியோவாக காட்ட சாமுண்டீஸ்வரி மேனேஜரை அடித்து விரட்டி கார்த்தியை பாராட்டுகிறாள். ரேவதி மகேஷ் விஷயத்தில் உங்க மேல தவறில்லை என்பதை புரிந்து கொண்டதாக சொல்லி மன்னிப்பு கேட்கிறாள். மேலும் மகேஷ் பற்றி நீங்க சொன்னதெல்லாம் உண்மை தானா என்று கேட்க, போக போக உண்மை என்ன என்பது உங்களுக்கே புரியும் என்று சொல்கிறான்.

அடுத்து ரேவதிக்கு விசா ஆபிசில் இருந்து போன் வர அவள் கார்த்தியுடன் கிளம்பி செல்கிறாள். சாமுண்டீஸ்வரிக்கு டாக்டர் மல்லிகா போன் செய்ய அவளும் கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Karthigai Deepam: சாமுண்டீஸ்வரிக்கு வந்த புது சிக்கல்; ரேவதிக்கு தெரியவரும் உண்மை?