சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்தது. இந்த சூழலில் நேற்று மாலை நேர நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195-ம், சவரனுக்கு ரூ.1,560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 295-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அடபோங்கப்பா..!! இனி கவரிங் தான் வாங்கணும் போலயே.. ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை..!
தங்கம் விலை நிலவரம் (14/06/2025):
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை உயர்ந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே அதாவது ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதனால் போர்ப்பதற்றம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு மேலும் அதிகரித்து, அதன் விலையும் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இதையும் படிங்க: என்ன மக்களே ரெடியா..? தொடர் சரிவில் தங்கம் விலை.. ஆனா வெள்ளி ரேட்..?