நகைகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். தங்க நகை விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அதை வாங்க மட்டும் பெண்கள் மறப்பதில்லை. எவ்வளவு விலை ஏறினாலும் அதை வாங்க ஒரு கூட்டம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் தங்கம் வாங்குவது கனவில் தான் என்று இருக்கின்றனர் நடுத்தர மக்கள்.
சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஜூன் மாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வந்த தங்கம் விலை, ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே ஏறுமுகத்தில் தான் உள்ளது. அதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன தெரியுமா..?
தங்கம் விலை நிலவரம் (04/07/2025):
இந்நிலையில் ஜூலை மாதத்தின் நான்காவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை ) தங்கம் விலை சற்று குறைந்துளளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.72,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.9,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சவரனுக்கு ரூ.71 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.72 ஆயிரத்தை தாண்டியுள்ளது இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 873 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் 78 ஆயிரத்து 984 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ஒரு கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.
இதையும் படிங்க: தலை சுற்ற வைக்கும் இன்றைய கோல்ட் ரேட்.. பெண்களுக்கு ஷாக்..!