நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கம் 8,980 ரூபாய்க்கும், சவரனுக்கு 70,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை நிலவரம் (01/05/2024):
இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 205 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 775 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,640 ரூபாய் குறைந்து 70 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: தங்கம் விலையில் தடாலடி மாற்றம்; கிராமிற்கு மட்டும் இவ்வளவு குறைவா?

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 224 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 572 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,792 ரூபாய் குறைந்து 76 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:

தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து 109 ரூபாய்க்கும், கிலோவிற்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்ததாலும், அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஏற்றத்தாலும் தங்கத்தின் விலைகள் வரலாறு காணாத உச்சத்திலிருந்து பின்வாங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஏறிய வேகத்தில் சரசரவென இறங்கிய தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு குறைவா?