ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான இன்று சற்று குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கம் மாற்றமின்றி நேற்று முன்தின நாள் விலையான கிராம் 8,990 ரூபாய்க்கும், சவரன் 71,920 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க: நகை வாங்குற ஆசையே போய்டும்.. ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் தெரியுமா?
தங்கம் விலை நிலவரம் (26/05/2025):
இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது மக்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 44 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 764 ரூபாய்க்கும், சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளியின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 10 காசுகள் அதிகரித்து 111 ரூபாய்க்கும், கிலோவிற்கு ரூ.100 அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது.
இதையும் படிங்க: நகை வாங்கணுமா.. உடனே கிளம்புங்க.. தலைகீழாக மாறிய தங்கம் விலை..!