• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்》 உடல்நலம்

    மனிதர்களுக்கு அவசியமான ஆவி பிடித்தல் சிகிச்சை... யாரெல்லாம் ஆவி பிடிக்கலாம், கூடாது..?

    உடல் உழைப்பு மிக மிகக் குறைவாக உள்ள மனிதர்களுக்கும், வியர்வையின் வாசனையே அறியாத `ஏ.சி.’ வாசிகளுக்கும் ‘ஆவி பிடித்தல் அல்லது வேது பிடித்தல்' அத்தியாவசியமான சிகிச்சை.
    Author By Jagatheswari Thu, 13 Feb 2025 23:05:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stream treatment is necessary for humans

    மருத்துவரீதியில் ‘ஆவி பிடிப்பது' என்னும் சிகிச்சை முறை, நிச்சயம் உடலுக்கு நல்லது. செலவில்லாத, வீட்டிலேயே எல்லோரும் செய்யக்கூடிய, உடல்நல சிகிச்சை இது. குறிப்பாக வியர்வையின் சுவை உப்பா, இனிப்பா என்று தெரியாத, உடல் உழைப்பு மிக மிகக் குறைவாக உள்ள மனிதர்களுக்கும், வியர்வையின் வாசனையே அறியாத `ஏ.சி.’ வாசிகளுக்கும் ‘ஆவி பிடித்தல் அல்லது வேது பிடித்தல்' அத்தியாவசியமான சிகிச்சை.

    முக வீக்கம், நீர்க்கோவை, தலைபாரம் போன்ற உபாதைகளுக்கு ஆவி பிடித்து, அதிகமாகச் சேர்ந்துவிட்ட நீரை, வியர்வையின் மூலம் வெளியேற்றி குணம் பெறலாம். வேது பிடித்து நோய்களை விரட்டும் முறை, இன்றைக்கும் கிராமங்களில் நடைமுறையில் இருக்கின்றன.
    பொதுவாக நல்ல உடல்நிலையில் இருப்பவர்களும், குளிர்காலத்தில் மாதம் இரண்டு முறை, வெயில் காலத்தில் மாதம் ஒரு முறை சுத்தமான நீரில் வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
    Cold and cough
    முன்பு இருமல், தும்மல் என்றால், துளசி இலை, இரண்டு கிராம்பு, கொஞ்சம் தும்பப் பூ ஆகியவற்றை சுடு நீரில் போட்டு, கம்பளியை உடம்பு முழுவதும் போர்த்தி, ஆவி பிடித்தால் இருமலும் தும்மலும் போய்விடும் என்று அன்றைய தாய்மார்கள் மருத்துவக் குறிப்புகளை வழங்கிவந்தார்கள். ஆனால் இன்றைக்கு, சாதாரண இருமலுக்கும் தும்மலுக்கும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ‘ஆன்ட்டிபயாடிக்’ மருந்துகளைத் தேடி, பலரும் மருந்தகங்களில் தஞ்சமடைவதைப் பார்க்கிறோம்.

    உடலில் கபம் நோயகள் அதிகரித்து சளி, இருமல் தொல்லைப்படுத்தும்போது சித்த மருத்துவத்தில் கற்பூரவள்ளி, துளசி, புதினா இலைகளை நசுக்கி, கொதிக்கும் நீரில் கலந்து ஆவி பிடித்தால் மூச்சுப் பாதையில் இறுகிக்கிடக்கும் கோழை இளகி, சுவாசம் தங்கு தடையின்றி உலா வரும். ஆஸ்துமா, சைனஸ் நோயால் துன்பப்படுபவர்கள், இந்த முறையை தாராளமாகப் பின்பற்றலாம். மேற்குறிப்பிட்ட மூலிகைகளில் காணப்படும் மருத்துவ குணம் கொண்ட ‘வாலடைல் ஆயில்' (Volatile oil), சுவாசப் பாதையில் தஞ்சமடைந்த நோய்க் கிருமிகளை அழித்துக் கோழையை வெளியேற்றும் (Expectorant action) செயலைச் செய்கின்றன.

    தலையில் நீர்க்கோத்துக்கொண்டு தலை பாரத்தையும், வலியையும் கொடுக்கும் நீர்க்கோவை நோயைப் போக்க எலுமிச்சை விதையையும், மஞ்சள் பொடியையும் நீரில் கலந்து, கொதிக்க வைத்து ஆவி பிடிக்க, தலை பாரம் நீங்கும். ‘யமக வெண்பாவில்' வேது பிடிக்கும் முறை பற்றி சித்தர் தேரையர் குறிப்பிட்டுள்ளார். ‘அரிசனை நொச்சிவெடி யட்டறல் செங்கல்லே’ என்ற வரி வேது பிடிக்க, மஞ்சள், நொச்சி, சாம்பிராணி, செங்கல் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது. மஞ்சள் மற்றும் சாம்பிராணிக்கு ‘கிருமிநாசினி’ (anti-microbial) பண்பும், வீக்கமுறுக்கி (anti-inflammatory) தன்மையும் உண்டு. வேது பிடிக்கும் நீரில் செங்கல் சேர்த்துப் பயன்படுத்துவதால், நீரின் சூடு நீண்ட நேரம் நிலைத்திருப்பது மட்டுமன்றி, பல வகையான நீர்ப் பிணிகள் நீங்கும்.
    Cold and cough
    தைல மர இலைகளைச் சேர்த்துச் செய்யப்படும் வேது முறையால், நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகள் அழியும். தைல மர இலைகளுக்கு, தசை இறுக்கத்தைக் குறைக்கும் தன்மை இருப்பதால் (Anti-spasmodic action), சுவாசப் பாதையில் உண்டான இறுக்கம் தளர்வடையும். இதில் உள்ள ‘சினியோல்' (Cineole) எனும் வேதிப்பொருளுக்குக் கோழையை அகற்றும் தன்மை உண்டு. வாத நோய்களை விரட்ட
    உடல் வலி, தொல்லை தரும் வாயு நீங்க, அலமாரி டப்பாக்களில் குவிந்து கிடக்கும் வலி நிவாரணி மருந்துகளை `படக்’ என்று எடுத்து விழுங்காமல், சூடேற்றிய நீரை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி, நிறைய உப்பு சேர்த்து, அதிலிருந்து வரும் ஆவியை உடலில் படுமாறு செய்யலாம்.

    வாத நோய்கள் நீங்க ஓமம், உப்பு, சுண்ணாம்பு, பெருங்காயம், திப்பிலி ஆகியவற்றை சிறிதளவு எடுத்து அரைத்து, நீரில் கலந்து கொதிக்க வைத்து, அந்த ஆவியை முகரலாம்.
    உடல் முழுவதும் வியர்வை பிடிக்கும்போது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சீராகும்.
    சருமம் மிளிர

    என்றாலும் வேது பிடிக்கக் கூடாதவர்கள்
    வறண்ட தேகம் கொண்டவர்கள், சொரியாஸிஸ், கரப்பான், படை போன்ற தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த மிகை அழுத்தம் கொண்டவர்கள், இதய நோயாளிகள், காமாலை நோய்க்கு ஆட்பட்டவர்கள் வேது பிடிக்கக் கூடாது. பெண்கள் கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் காலங்களிலும் வேது பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.

    மேலும் படிங்க
    இலங்கையை வீழ்த்திய இந்திய

    இலங்கையை வீழ்த்திய இந்திய 'ஏ' அணி: இந்தியா - இலங்கை - ஆப்கானிஸ்தான் தொடரில் இந்திய வீரர்கள் சாதனை!

    கிரிக்கெட்
    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share