இன்றைய பஞ்சாங்கம்:
கிழமை: வெள்ளிக் கிழமை தமிழ் வருடம்: விசுவாவசு தமிழ் மாதம்: புரட்டாசி நாள்: 31 ஆங்கில தேதி: 17 மாதம்: அக்டோபர் வருடம்: 2025 நட்சத்திரம்: இன்று மாலை 5-22 வரை மகம் பின்பு பூரம் திதி: இன்று பிற்பகல் 2-16 வரை ஏகாதசி பின்பு துவாதசி யோகம்: மரண, சித்த யோகம்.
நல்ல நேரம்: காலை 9-15 to 10-15 நல்ல நேரம்: மாலை 4-45 to 5-45 ராகு காலம்: காலை 10-30 to 12-00 எமகண்டம்: மாலை 3-00 to 4-30 குளிகை: காலை 7-30 to 9-00 கௌரி நல்ல நேரம்: காலை 12-15 to 1-15 கௌரி நல்ல நேரம்: மாலை 6-30 to 7-30 சூலம்: மேற்கு சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (14-10-2025)..!! இந்த ராசிக்கு இன்று பண வரவு அமோகம்..!!
இன்றைய நாள் ஆன்மிக செயல்களுக்கு ஏற்றதாக இருக்கும். நல்ல நேரங்களைப் பயன்படுத்தி முக்கிய முடிவுகளை எடுக்கலாம். ராகு காலம் போன்ற தோஷ காலங்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
இன்றைய ராசிபலன்:
மேஷம் (Aries): மளிகை மற்றும் சில்லரை வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடமிருந்து பாராட்டு வரும். தொழிலுக்கு வங்கி கடன் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு புதிய வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
ரிஷபம் (Taurus): தம்பதியரிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் உழைப்பு அதிகமாகும். பணம் வரும் வழிகள் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். அரசு டெண்டர்களில் வெற்றி பெறுவீர்கள். கலைஞர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். வாகனம் ஓட்டும்போது கவனம் அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
மிதுனம் (Gemini): மருந்து வியாபாரம் லாபகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களுடன் கோபமாக பேசாதீர்கள். உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். வேலை தேடுவோருக்கு உத்யோகம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழும் மரியாதையும் உயரும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
கடகம் (Cancer): வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்துவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்படும். கணவரிடம் சமரசம் செய்து போவது நலம். நண்பர்களின் ஆலோசனையை பின்பற்றுங்கள். வீட்டில் வேலையாட்கள் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுவர். உங்கள் மகள் வெளிநாடு செல்லும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.
சிம்மம் (Leo): சமூக ஆர்வலர்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். பெண்கள் வீட்டை அலங்கரிப்பீர்கள். அரசு சார்ந்த புதிய ஏஜென்சி தொடங்குவீர்கள். சந்தைப்படுத்தல் துறையினருக்கு அதிக பயணம் உண்டு. விவசாயிகளின் பொருட்களுக்கு விலை உயரும். வேலையில் மனைவியின் உதவி அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
கன்னி (Virgo): இரவு நேர நீண்ட பயணங்களை தவிருங்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். காதலர்கள் பொறுமை காக்க வேண்டும். குடும்பத்தில் குழப்பங்கள் அகலும். தொழிலதிபர்களுக்கு ஊழியர்கள் உங்கள் யுக்திகளை கற்றுக்கொள்வர். குலதெய்வ கோவிலை சீரமைக்க உதவுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்.
துலாம் (Libra): உத்யோகத்தில் வேலைப்பளு தொடர்ந்து இருக்கும். மூளை சுறுசுறுப்பாக செயல்படும். மாணவர்கள் சிறப்பாக படிப்பர். உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினருடன் இணக்கமாக இருங்கள். நட்பு வட்டம் விரிவடையும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
விருச்சிகம் (Scorpio): சிறிய தூர பயணங்கள் மேற்கொள்வீர்கள். பழைய நிலுவைத் தொகைகள் வசூலாகும். மாணவர்களின் நினைவுத்திறன் அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சி வெற்றியடையும். தம்பதியரிடையே சச்சரவுகள் நீங்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகளை கவனியுங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
தனுசு (Sagittarius): பிரபலங்களால் நன்மைகள் ஏற்படும். உங்களைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். உத்யோகத்தில் வேலையை விரைவாக முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். பொறுமை அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
மகரம் (Capricorn): இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவழிபாடு மட்டும் செய்யுங்கள். பல காரியங்களில் தடைகள் வரும் என்பதால் புதிய திட்டங்களை தவிருங்கள். யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். மனக்குழப்பம் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
கும்பம் (Aquarius): கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணம் வெற்றிகரமாக இருக்கும். பண வரவு சீராக இருக்கும். கமிஷன் தொழிலில் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். பொறுமை கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் சிறப்பாக படிப்பர். உடல் ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: கிரே.
மீனம் (Pisces): விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் வெல்வீர்கள். விவசாயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதற்கான திட்டங்களில் ஈடுபடுவீர்கள். காதல் வெற்றியடையும். உறவினர்களால் நன்மைகள் உண்டு. மாணவர்கள் விருப்பமான துறையில் சேர்வர். அலுவலகத்தில் வீண் பேச்சுகளை தவிருங்கள். அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை.
இந்த பலன்கள் உங்கள் நாளை சிறப்பாக்க உதவும். ஜோதிடம் ஒரு வழிகாட்டி மட்டுமே; உங்கள் முயற்சிகளே வெற்றியின் அடிப்படை. நாளை மீண்டும் சந்திப்போம்..!
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (10-10-2025)..!! அதிர்ஷ்டத்தால் ஜொலிக்கப்போகும் ராசி.. எது தெரியுமா..??