• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 வாழ்க்கைமுறை》 ஆன்மிகம்

    கடவுளுக்கே தீட்டா..? மக்களின் கலகக்குரலில் அழகரை கள்ளழகராக மாற்றிய வைதீக அரசியல்..!

    உழைக்கும் மக்களின் சாமிபோல வேடமணிந்துதான் கள்ளர்நாடு முழுமையும் பெருமாள் வரவேண்டும்.இல்லையேல் கொண்டுசெல்ல அனுமதிக்கமாட்டோம் என்றனர்.
    Author By Thiraviaraj Tue, 13 May 2025 10:44:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vedic politics that turned the Azhagar into Kallazhagar

    வைணவர்களின் பாண்டி நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று திருமாலிருஞ்சோலை. இங்கு எழுந்தருளி இருப்பவர் சுந்தரராஜப் பெருமாள். மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலுள்ள திருமாலிருஞ்சோலையில் இருந்து(அழகர் கோவில்) ஒவ்வொரு ஆண்டும், சுந்தரராஜப்பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளி, மண்டூக முனிவரின் சாபத்தைப் போக்கித் திரும்புவதாக ஐதீகம். இதுவே சித்திரைத் திருவிழாவாக நடக்கிறது.

    Azhagar i

    உடமை வர்க்கத்தின் பெருந்தெய்வமான சுந்தரராஜப்பெருமாள் தன்னுடைய ஐதீகக்கோலத்துடன் அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை வருவதில்லை. ஒரு கையில் வளரித்தடி,மற்றொருகையில் சாட்டைக்கம்பு, தலையில் கொண்டை, காதில் கல்வைத்த கடுக்கண், அரைக்கால் அளவும், இடுப்புக்கு மேலேயும் கருப்புநிற ஆடை என கள்ளர் கோலத்தில்தான் அவர் மதுரை வருகிறார்.

    இதையும் படிங்க: பண்டிகை சீசனுக்கு முன்பே.. மலிவு மின்சார ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்.. விலை எவ்வளவு.?

    அதே நேரத்தில், கள்ளர் கோலத்துடன் மதுரைக்குள் நுழைவதில்லை. தல்லாகுளம் வந்தவுடன் கள்ளர் கோலத்தைக் கலைத்துவிட்டு, பெருந்தெய்வ வேடமணிந்து வைகை ஆற்றிக்குச் செல்கிறார். அதேபோல் தல்லாகுளம் வரை வந்து, மீண்டும் கள்ளர் வேடம் அணிந்து அழகர்கோவிலுக்கு திரும்புகிறார்.

    Azhagar i

    வைதீகசமய மரபில் பெருந்தெய்வம் என்று பார்ப்பனியத்தால் கட்டமைக்கப்பட்ட கடவுளொன்று, கீழ்சாதியொன்றின் பழக்கவழக்கத்தின் படி வேடமணிந்து, கீழிறங்கி பவனிவருவது வேறெங்கும் இல்லாத, சாஸ்திரங்கள் அனுமதிக்காத ஒரு முக்கிய நிகழ்வாகும்.ஏன்?எப்படி?

    மதுரைக்கும், அழகர்கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதி,கள்ளர் இனமக்கள் அதிகமாக வாழ்ந்த மேலூர் கள்ளர் நாட்டுப் பகுதியாகும்.தங்கள் பகுதியில், தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, வழிபடாத, முன்பின் பார்க்காத பொன்னால் செய்யப்பட்ட விக்கிரகங்கள் தூக்கிச் செல்லப்பட்டபோது அதை மறிததனர் மேலூர்நாட்டுக் கள்ளர்கள்.

    Azhagar i

    மதுரையை ஆண்ட நாயக்கர்களால், கள்ளர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வேறுவழியின்றி கள்ளர் இனமக்களோடு ஒருசமரச ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி உழைக்கும் மக்களின் சாமிபோல வேடமணிந்துதான் கள்ளர்நாடு முழுமையும் பெருமாள் வரவேண்டும். இல்லையேல் கொண்டுசெல்ல அனுமதிக்கமாட்டோம் என்றனர். அதன்படியே முடிவானது.

    சக்ராயுதம் கழட்டப்பட்டு, உழைக்கும் மக்களின் ஆயுதமான வளரியைக் கையில் ஏந்திக்கொண்ட பிறகு தான் வைணவக்கடவுள் வைகை நோக்கி வர முடிந்தது. இதுதான் இன்றளவும் நடக்கிறது. இதில் முக்கியமான விசயம் என்ன தெரியுமா? ஆகமங்களின் படியும், பிரம்மபுராணத்தின்படியும், ஒருதெய்வத்திற்கு வேறொரு தெய்வத்தின் மந்திரத்தை உச்சரித்தாலே தீட்டு. அத்தீட்டை நீக்க சம்ரோஷனச் சடங்கு செய்யப்படவேண்டும். ஆனால் இங்கு உருவமே மாற்றப்பட்டுவிட்டது. அதுவும் பார்ப்பனியம் கூறும் கீழ்சாதி உருவம்.

    Azhagar i

    வைகையில் இருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவிலுக்குச் செல்வார்.அங்கு அவரைக் கோவிலுக்கு உள்ளே உடனே கொண்டு செல்லாமல், விளக்குமாற்றால் அடிப்பார்கள் பார்ப்பனர்கள். ஒரு கடவுளையே விளக்கு மற்றால் அடிக்கக் காரணம் யாதெனில், அவர் கீழ்சாதி கள்ளர் வேடம் போட்டதால் தீட்டைக் கழிக்கிறார்களாம்.

    அதிகாரமும், ஆட்சிபீடமும், தங்கள் பண்பாட்டை, சமயமரபை,அழிக்க முயலும்போது, உழைக்கும் மக்கள் போராடுகின்றனர். பார்ப்பனியம் அதற்காக தனது கொள்கையில் சமரசமும் செய்து கொள்ளும். ஆனால் தீட்டு தீட்டுதான் என்பதிலும் உறுதியாய் இருக்கும்.கள்ளர் இனமக்களின் போர்க்குரலின் அடையாளமே கள்ளழகர்.Azhagar i

    இதில் மேலும் முக்கியமான விசயம் ஒன்று உண்டு.மீனாட்சி கல்யாணத்திற்காக அவர் வருகிறார் என்பது நாயக்கர்கள் காலத்தில் செய்யப்பட்ட இடைச் செருகல் தான். மீனாட்சி திருமணம் தனிக்கதை. மண்டூக முனிவரின் சாபம் போக்குவது தனிக்கதை. இரண்டையும் ஒன்றாக்கியது நாயக்கர்கள் தேவைக்காக செய்யப்பட்டது. ஏனெனில் பெருமாளின் மடியில் அமரவைத்து தான் சிவனுக்கு மீனாட்சி திருமணம் செய்து வைக்கப்படுகிறார் என்ற சிற்பங்கள் கோவிலில் எங்கும் காணலாம். ஆனால், தான் வருவதற்குள் மீனாட்சி திருமணம் முடிந்துவிட்டதாக வைகை வரை வந்து திரும்புகிறார் என்பார்கள்.

    Azhagar i

    மதங்கள் உருவாக்கிய கடவுள்களை எதிர்த்து, உழைக்கும் மக்களின் கலகக்குரலில் எழுந்ததே கள்ளழகர். தங்களின் வழிபாட்டு முறைகள் அவமதிக்கப்படும் பொழுதும், வழிபாட்டு உரிமைகள் நிராகரிக்கப்படும் பொழுதும், தங்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள் புறக்கணிக்கப்படும் பொழுதும், எதிர்த்துப் போராடிய வரலாறு இங்கு ஏராளம். அதில் ஒன்று கள்ளழகர்.
     

    இதையும் படிங்க: சிறிய காரிலும் 5 பாதுகாப்பு அம்சங்கள்.. இனி மாருதி சுசுகி காரை நம்பி வாங்கலாம்!!

    மேலும் படிங்க
    பொள்ளாச்சி கேஸை முடிச்சிட்டீங்க.. அண்ணா பல்கலை. கேஸை விட்டுடாதீங்க..! கருத்தை பதிவு செய்த விஜே சித்து..!

    பொள்ளாச்சி கேஸை முடிச்சிட்டீங்க.. அண்ணா பல்கலை. கேஸை விட்டுடாதீங்க..! கருத்தை பதிவு செய்த விஜே சித்து..!

    சினிமா
    பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!

    பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!

    தமிழ்நாடு
    இதுதான் டா தீர்ப்பு.. பொள்ளாச்சி வழக்கு ஜெயிச்சாச்சி.. விஜய் தவெக தலைவராக பதிவிட்டுள்ள பதிவு வைரல்..!

    இதுதான் டா தீர்ப்பு.. பொள்ளாச்சி வழக்கு ஜெயிச்சாச்சி.. விஜய் தவெக தலைவராக பதிவிட்டுள்ள பதிவு வைரல்..!

    சினிமா
    EPS நடவடிக்கையால் தான் நீதி கிடைத்துள்ளது.. பொள்ளாச்சி வழக்கு குறித்து அதிமுக கருத்து..!

    EPS நடவடிக்கையால் தான் நீதி கிடைத்துள்ளது.. பொள்ளாச்சி வழக்கு குறித்து அதிமுக கருத்து..!

    தமிழ்நாடு
    இந்தியாவிற்குள் பாகிஸ்தானின்

    இந்தியாவிற்குள் பாகிஸ்தானின் 'ஆண்குறி'..! விசிகவினரின் வக்கிரபுத்தி..! கொதித்தெழும் தேச பற்றாளர்கள்..!

    அரசியல்
    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி..!

    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!

    பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!

    தமிழ்நாடு
    EPS நடவடிக்கையால் தான் நீதி கிடைத்துள்ளது.. பொள்ளாச்சி வழக்கு குறித்து அதிமுக கருத்து..!

    EPS நடவடிக்கையால் தான் நீதி கிடைத்துள்ளது.. பொள்ளாச்சி வழக்கு குறித்து அதிமுக கருத்து..!

    தமிழ்நாடு
    இந்தியாவிற்குள் பாகிஸ்தானின் 'ஆண்குறி'..! விசிகவினரின் வக்கிரபுத்தி..! கொதித்தெழும் தேச பற்றாளர்கள்..!

    இந்தியாவிற்குள் பாகிஸ்தானின் 'ஆண்குறி'..! விசிகவினரின் வக்கிரபுத்தி..! கொதித்தெழும் தேச பற்றாளர்கள்..!

    அரசியல்
    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி..!

    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி..!

    தமிழ்நாடு
    ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

    ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

    இந்தியா
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யார் யாருக்கு எத்தனை ஆயுள் தண்டனை? -  எவ்வளவு அபராதம் விதிப்பு?

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யார் யாருக்கு எத்தனை ஆயுள் தண்டனை? -  எவ்வளவு அபராதம் விதிப்பு?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share