• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தாது மணல் கொள்ளைக்கு ஆப்படித்த நீதிமன்றம்..! ரூ. 5,832 கோடி வசூல்.. சிபிஐக்கு மாற்றியது செல்லும்..!

    கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தீர்ப்பளித்துள்ளது.
    Author By Rahamath Mon, 17 Feb 2025 14:04:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mhc-transfers-ore-sand-robbery-cases-to-cbi

    கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் வி.வி.மினரல், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட், பீச் சேண்ட் மைனிங் உள்ளிட்ட நிறுவனங்கள் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அதை தடுக்கக் கோரி கடந்த 2015-ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கை வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து  கடந்த 2016-ல் விசாரித்து வந்தது.

    இந்த வழக்கில், கடந்த ஆண்டு  தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், தாதுமணல் எடுப்பதற்காக ஏழு நிறுவனங்களுக்கு, உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கு கொண்டு செல்வதற்கும் 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    #MHC

    தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்ததால் ஏற்பட்ட 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

    இதையும் படிங்க: இலங்கை துணை தூதரகத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..

    தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி மற்றும் சத்யபிரதா சாஹு தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் அளித்த அறிக்கையில், மூன்று மாவட்டங்களிலும் 234 ஹெக்டேர் பரப்பில் ஒரு கோடியே ஒரு லட்சம் டன் தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதும், ஒரு கோடியே 55 லட்சம் டன் இருப்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    #MHC

    பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்டு இருந்த தாது மணல்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, தற்போது 24 மணி நேரம் காவல்துறை கண்காணிப்பில் தாது மணல் பாதுகாக்கப்பட்டு வருவதாக  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் சுமார் 6,449 டன் அளவிலான மோனோசைட் என்ற கனிமங்களும் கடத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. 

    மத்திய அரசு தரப்பில், அணுசக்திக்கு  தேவையான மோனோசைட் தாது என்பது மிக முக்கியமான தாதுவாக இருப்பதால் அதை  பிரித்தெடுக்க மத்திய அரசு யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டது.  மோனோசைட் தாது பிரித்து எடுப்பதற்காக எந்த ஒரு புதிய கொள்கைகளையும் மத்திய அரசு வகுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தது.

    #MHC

    இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம்,எம்.ஜோதிராமன் அமர்வு முன்பு நடைபெற்றது. இந்த வாதத்தின் போது நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி அரசு ஆவணங்கள் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளாக தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை ஐந்து விரிவான அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த அறிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும் ராயல்டி தொகையை 5832 கோடி வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    உரிய உரிமைத் தொகையை வசூலிக்காத அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும், தாது மணல் இருப்புகளை தமிழ்நாடு அரசு பறிமுதல் செய்து மத்திய அரசு நிறுவனம் ஐஆர்ஏ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தாது மணல் கொள்ளை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.

    #MHC

    கனிம வள நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள்  வி.ராகவாச்சாரி, ஸ்ரீநாத்ஸ்ரீதேவன் மற்றும் வைகுண்டராஜன் ஆகியோர் ஆஜராகி, தாது மணல்களுக்கான உரிய உரிமை தொகை அரசு செலுத்தப்பட்டுவிட்டது என்றும், தாது மணல்கள் தங்களுக்கு சொந்தமானதுதான் என்றும், நீதிமன்ற உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் அறிக்கையை ஏற்ககூடாது என்றும் வாதிட்டார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார், தாதுமணல் முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார். மேலும் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞரின் அறிக்கையின் அடிப்படையில் இழப்பீட்டு தொகையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டுவதாகவும் சுட்டிக்காட்டினார். 

    #MHC

    அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று பிறப்பித்த தீர்ப்பில், முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும், வழக்கு ஆவணங்களை 4 வாரங்களில் சிபிஐ யிடம் தமிழக  ஒப்படைக்க வேண்டும், தேவையான புலன் விசாரணை குழுக்களை சிபிஐ  அமைக்க வேண்டும், விசாரணையை சிபிஐ இயக்குனர் கண்காணிக்க வேண்டும், அதிகாரிகள் தொடர்பு, அரசியல் தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் நிறுவனங்களின் வணிக பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

    #MHC

    அமலாக்க துறை, வருமான வரித்துறை, வணிக வரித்துறை விசாரணை நடத்த வேண்டும், முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிக்ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் முறைகேடு தொடர்பாக அரசு நியமித்த குழுக்கள், நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அறிக்கைகள் செல்லும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 1.4 கோடி மெட்ரிக் டன் மணலை  மத்திய அரசு நிறுவனமான Indian rare earth limited India விடம்  உடனடியாக ஒப்படைக்க வேண்டும்,  5,832 கோடி ராயல்டி செலுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வி. சுரேஷ் அளித்த அறிக்கை  உத்தரவு செல்லும் , அந்தத் தொகையை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
     

    இதையும் படிங்க: பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்தும் விவகாரம்.. தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல்..

    மேலும் படிங்க
    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது...பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி

    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது...பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி

    தமிழ்நாடு
    ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

    ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

    இந்தியா
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யார் யாருக்கு எத்தனை ஆயுள் தண்டனை? -  எவ்வளவு அபராதம் விதிப்பு?

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யார் யாருக்கு எத்தனை ஆயுள் தண்டனை? -  எவ்வளவு அபராதம் விதிப்பு?

    தமிழ்நாடு
    பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!

    பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!

    இந்தியா
    சர்ப்ரைஸ் இங்க இருக்கு.. ஆனா வாங்கவேண்டிய மனைவி இல்லை.. கவுண்டமணி வேதனை..!

    சர்ப்ரைஸ் இங்க இருக்கு.. ஆனா வாங்கவேண்டிய மனைவி இல்லை.. கவுண்டமணி வேதனை..!

    சினிமா
    ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!

    ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!

    இந்தியா

    செய்திகள்

    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது...பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி

    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது...பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி

    தமிழ்நாடு
    ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

    ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

    இந்தியா
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யார் யாருக்கு எத்தனை ஆயுள் தண்டனை? -  எவ்வளவு அபராதம் விதிப்பு?

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யார் யாருக்கு எத்தனை ஆயுள் தண்டனை? -  எவ்வளவு அபராதம் விதிப்பு?

    தமிழ்நாடு
    பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!

    பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!

    இந்தியா
    ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!

    ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!

    இந்தியா
    #BREAKING: சாகும்வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

    #BREAKING: சாகும்வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share