• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'நாதகவினரை சீமான் பாஜகவிடம் விற்றுவிடுவார்...' கொ.ப செ., தமிழரசன் பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழ் தேசியத்திற்கு எதிரான, ஒரு பிழையான தத்துவங்களை நோக்கி பயணப்படும் பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள் என்றே தோன்றுகிறது.
    Author By Thiraviaraj Wed, 19 Feb 2025 14:05:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilarasan-alleges-that-seeman-will-sell-out-the-ntk-m

    நாதகவினரை பாஜகவிடம் விற்றுவிடுவார் சீமான் என நாதகவில் இருந்து விலகிய கொள்கை பரப்பு செயலாளர் கோ.தமிழரசன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

    நாதகவில் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த கோ.தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகினார். இதுகுறித்து கடிதம் மூலம் விளக்கமளித்துள்ள அவர், ''சீமான் அவர்களுக்கு வணக்கம். 33 ஆண்டு காலமாக தமிழ்த் தேசிய அரசியலுக்கானப் பயணத்தில் இருந்தபோதும், கட்சித் தொடங்கிய நாட்டிலிருந்து 15 ஆண்டுகளாக தற்போது வரை கட்சிக்கான களங்களில் மக்களுக்கான தளங்களில் இணைந்து பணியாற்றியதை எண்ணி மகிழ்கிறேன். சமீப காலமாக உங்கள் பேச்சும் செயலும் நமது தமிழ் தேசிய கருத்துகளுக்கு முரணாக இருக்கின்றது. 

    BJP

    எதைச் சொல்லுவது? மதவாத அரசியலை எதிர்ப்பதாக கூறுகின்ற தாங்கள் பாஜக மனித குலத்தின் எதிரி என்று சொல்லிவிட்டு, தற்போது அந்த அமைப்பில் இருக்கிற எச்.ராஜா அவர்களை பேரறிஞர் என்று சொல்வதையா? தமிழிசை அவர்கள் சீமான் எங்கள் 'தீம் பாட்னர் என்று கூறியதை நீங்கள் மறுக்காததையா? திருமாவளவன் அவர்களை அண்ணன் என்று கூறிக்கொண்டே நாம் தமிழர் கட்சி மேடையில், மாற்று இயக்கத்தினர் மேடை நாகரிகம் இன்றி விமர்சிக்கும் போதும் கேலி பேசும் போதும், தாங்கள் கைத்தட்டி சிரித்து மகிழ்வதையா? நடிகர் விஜய் கட்சி தொடங்குகிற போது தம்பியென்று சொன்னதையும், அவரே என்னை எதிர்த்தாலும் நான் அவரை எதிர்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, நடுரோட்டில் நின்றால் லாரி அடித்து செத்துவிடுவாய் என்று பேசியதையா?

    இதையும் படிங்க: அநீதியை எதிர்த்தால் இதுதான் கதியா? - பெட்ரோல் குண்டு வீசி உயிருடன் எரிக்கப்பட்ட இளைஞர் மரணம் - ராமதாஸ் ஆவேசம்! 

    BJP

    தம்பி அப்துல் ரவூப் நினைவு நாளில் என்னை யாராவது சங்கி" என்றால் செருப்பால அடிப்பேன் என்று செருப்பை காட்டிவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த பிறகு 'சங்கி" என்றால் 'சகத் தோழன்" என்று சொல்வதையா? இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை எப்படி ஏற்பது? மாற்றுக் கட்சியில் இருப்பவர்களைத் தான் இப்படி பேசுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிகுந்த நேரத்தில், வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எங்கள் குலதெய்வம் தங்கை காளியம்மாள் என்று கூறிய நீங்கள், 'பிசிறு என்று பேசியதையும், தலைவருக்கு நிகராக நாங்கள் மதித்து வந்த பொட்டு அம்மான் அவர்களை மசுரு என்று பேசி வந்த குரல் பதிவையும், இன்றளவிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி இன்னும் எத்தனையோ
     
    இந்தச் சூழலில் கட்சியின் தத்துவங்களை மேடைகளில் பேசி வந்த நீங்கள், தமிழ் தேசியத்திற்கு எதிரான, ஒரு பிழையான தத்துவங்களை நோக்கி பயணப்படும் பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள் என்றே தோன்றுகிறது. அதே வேளையில் மேடையில் உங்களுக்கு முன்னால் சாதிப் பெருமை பேசுகிறவர்களை இப்படி பேசாதே என்று கண்டிக்காமல் சிறிதும் பொறுப்புணர்வற்று கைக்கொட்டி சிரித்து சாதி வெறியைத் தூண்டுவதை ஆமோதிக்கின்றீர்கள். தமிழ்த் தேசிய விடுதலையில் சாதி ஒழிப்பு அவசியம் எனும் போது மேற்கண்ட தங்களின் செயல்கள் மன வேதனையைத் தருகிறது.

     BJP

    தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தத்துவங்களையும், கட்சியின் கொள்கைகளையும் கட்சியில் உள்ள அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி நீங்கள் சொல்வதே கொள்கை, நீங்கள் பேசுவதே தத்துவம் என்றும் பிரபாகரனிசத்தை சிதைத்து சீமானிசத்தை விதைத்து கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள்.
     
    எனது இத்தனை ஆண்டுகால தமிழ்த்தேசிய அனுபவமும் கடந்து வந்த பாதைகளும், அனைத்து மக்களுக்கான அரசியலை நோக்கி உங்கள் தலைமை ஏற்றுக் கொண்டு இனிமேல் என்னால் தொடர முடியாது என்பதை உணர வைத்திருக்கிறது. மண்ணுக்கான, மக்களுக்கான, மக்களாட்சி தத்துவத்திற்கான அரசியலை நோக்கி, எனது பயணம் தொடரும்.

    BJP
     
    எனவே, தற்போது நாம் தமிழர் கட்சியில் வகித்து வரும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும், விலகுகிறேன் என்பதை, இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுநாள் வரை, கட்சியில் உடன் பயணித்த வழிகாட்டிகள், அண்ணன், தம்பிகளுக்கும், அக்கா, தங்கைகளுக்கும், உறவுகள் அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்கி வணங்கி மகிழ்கிறேன். அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் என்ற செல்வத்தைத் தேய்க்கும் படை. இது ஆட்சிக்கு மட்டும் அல்ல. கட்சிக்கும் பொருந்தும்'' எனக் கூறியுள்ளார் தமிழரசன்.

    இதையும் படிங்க: என்னை ஜெயில்ல போடுங்க.. ஓய்வில் நன்றாக படிப்பேன் - சீமான் பரபரப்பு பேட்டி

    மேலும் படிங்க
    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு
    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    தமிழ்நாடு
    "புதிய எஸ்பிக்கள் பட்டியல் இதோ": சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி காட்டிய தமிழக அரசு!

    "புதிய எஸ்பிக்கள் பட்டியல் இதோ": சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த அதிரடி காட்டிய தமிழக அரசு!

    தமிழ்நாடு
    மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!

    மத்திய அரசு நிதியை உடனே வழங்குக.. ஜூன் 29-ல் ஆர்ப்பாட்டம் - வீரபாண்டியன் அறிவிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    "நியாயம் கேட்டால் குண்டர் படை மிரட்டல்": மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீது பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    "நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் சூழ்ச்சிக்குக் கண்டனம்": எம்.பி சு. வெங்கடேசன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    "காவல்துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்துக!": காவலர் பற்றாக்குறை குறித்து எம்.பி ஜோதிமணி கவலை!

    தமிழ்நாடு

    "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!

    தமிழ்நாடு

    "தவெகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை": வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்!

    தமிழ்நாடு
    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share