2004-ல் எண்ணூரில் நண்பனையே கழுத்தறுத்துக் கொன்று, 21 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலைகாரன் ரபீக்கை (57), சென்னை போலீஸ் அதிரடியாக கைது செய்திருக்கிறது! இந்தக் கைது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது,
ஏனென்றால் இவன் பெயரை ராஜேந்திரன்னு மாத்தி, கடலூர், அரியலூர், சேலம், பெங்களூரு என பல இடங்களில் சுற்றித் திரிந்து, கடைகளில் சாம்பிராணி ஊதி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறான். இரவு முழுவதும் பேருந்து நிலையங்களில் படுத்துறங்கியிருக்கிறான்!
2004 மே 24 அன்று எண்ணூர் இந்திரா நகரில் ரபீக் (அப்போது 35 வயது) தன் நண்பர் தாஜிதீனுடன் வீட்டில் மது குடித்துக் கொண்டிருந்தான். அப்போது தாஜிதீன் ரபீக்கின் மனைவி ரசூல் பீபியைப் பற்றி தவறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த ரபீக், கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தலைமறைவானான். அன்று முதல் 21 வருஷமாக போலீஸ் கண்ணில் படவே இல்லை!
இதையும் படிங்க: பயிரை மேய்ந்த வேலி!! கோவையை தொடர்ந்து விழுப்புரம் மாணவிக்கு கொடூரம்! போலீஸ்காரர் கைது!
உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதும் எண்ணூர் போலீஸ் இரண்டு தனிப்படைகளை அமைத்தது. வாக்காளர் பட்டியல் வழியாக தேடினர். அப்போது தான் தெரிந்தது – ரபீக்கின் இயற்பெயர் ராஜேந்திரன், தந்தை பரமசிவன், கடலூர் ஆக்கனூர் பூர்வீகம் என்று! இந்த தகவலை வைத்து எஸ்.ஐ.ஆர். படிவ விபரங்களை கேட்டு சாதாரண உடையில் விசாரணை நடத்தினர். பழைய புகைப்படத்தை வைத்து அடையாளம் கண்டுபிடித்தனர்.
கடைசியில் பெங்களூரு மாவட்டம் மாண்டிவாளா சந்தை பகுதியில் சாம்பிராணி ஊதிக் கொண்டிருந்த ரபீக்கை மக்களோடு மக்களாக தங்கி, தனிப்படை போலீஸ் நேற்று அதிரடியாக கைது செய்தது. இப்போது அவனுக்கு 57 வயது. எண்ணூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டவுடன், “21 வருஷமா எப்படி தப்பிச்சே?” என்று போலீஸே ஆச்சரியப்பட்டிருக்கிறது!
சிறப்பாக புலனாய்வு செய்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு கொலைகாரனை கைது செய்த எண்ணூர் தனிப்படை போலீஸாரை உயர் அதிகாரிகள் பாராட்டி தள்ளியிருக்கிறார்கள். “எஸ்.ஐ.ஆர். படிவம் கூட குற்றவாளியைப் பிடிக்கும் ஆதாரமாக மாறியிருக்கிறது” என்று போலீஸ் வட்டாரம் பெருமைப்பட்டுக் கொள்கிறது. 21 வருஷம் தப்பித்த கொலைகாரன் இறுதியில் சிக்கியது சென்னை காவல்துறைக்கு பெரிய வெற்றி!
இதையும் படிங்க: லாட்ஜில் கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி!! கோவையை அலறவிட்ட கள்ளக்காதல் ஜோடி!