கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பகுதியில் நடந்த கொடூர சம்பவம் மக்களை அதிரச் செய்துள்ளது. தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து 70 வயது முதிய தனது பாட்டியை கொன்ற இளம்பெண், அதை மறைத்து தனது கணவனையும் கள்ளக்காதலனோடு சேர்ந்து கொல்ல முயன்ற சம்பவம் வெளிய வந்துள்ளது.
அன்னூர் அருகே வசிக்கும் லோகேந்திரன் (33), பைனான்ஸ் தொழிலாளரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளருமானவர். அவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27)வும், அவர்களது 6 வயது மகனும் வீட்டில் இருந்தனர். மெட்டில்டாவின் 70 வயது பாட்டி மயிலாத்தாளும் அவர்களுடன் வாழ்ந்து வந்தார்.
மெட்டில்டா, அன்னூர் சவுத் இண்டியன் பைன்வெஸ்ட் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கர்நாடகா கிளையில் கடன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சிக்பள்ளாப்பூர் கிளை மேலாளர் நாகேஷ் (25) உடன் அறிமுகமானார். வீடியோ கால் மீட்டிங்குகளின்போது இருவரும் நெருக்கமாகினர். திருமண பந்தத்தை மீறி மெட்டில்டா, நாகேஷை காதலித்தார். நாகேஷுக்கு , இன்னும் திருமணமாகவில்லை. இருவரும் தொடர்ந்து போனில் பேசி, தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலியுடன் 4 நாட்கள் டூர்! மனைவியின் கள்ளக்காதலால் கொலையாளியான கணவன்!
ஒரு நாள், வெளியே சென்றிருந்த பாட்டி மயிலாத்தாள் வீட்டுக்கு திரும்பியபோது, மெட்டில்டாவும் நாகேஷும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்தார். மெட்டில்டா, அலுவல் வேலையாக பேசிக்கொண்டிருந்ததாக மழுப்பினார். ஆனால் சந்தேகம் தீராத மயிலாத்தாள், இதை லோகேந்திரனிடம் சொன்னார். அதிர்ச்சியடைந்த லோகேந்திரன், மனைவியை கண்டித்தார். ரகசியமாக அவளை கண்காணித்து வந்தார்.

ஒரு நாள், மெட்டில்டா ஓட்டலுக்குச் செல்வதை அறிந்து பின்தொடர்ந்தார். அங்கு நாகேஷுடன் கையும் களவுமாகப் பிடிபட்டனர். கோபத்தில் நாகேஷை அடித்த லோகேந்திரன், மனைவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இதை நிறுவனத்திற்கு தெரிவித்ததால், இருவரும் வேலையை இழந்தனர். எல்லாம் சரியானது என நம்பிய லோகேந்திரன், கடந்த ஏப்ரல் மாதம் மதுரை வேலைக்குச் சென்றார். அப்போது மெட்டில்டா, நாகேஷை வீட்டுக்கு அழைத்தார். மீண்டும் உல்லாசமாக இருந்தனர். திரும்ப வந்த பாட்டி இதைப் பார்த்து வசைபாட, திடுக்கிட்ட கள்ளக்காதலர்கள், அவரைத் தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தி கொன்றனர்.
மாரடைப்பால் இறந்ததாக மெட்டில்டா, லோகேந்திரனையும் உறவினர்களையும் நம்ப வைத்தார். இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. சில மாதங்களுக்குப் பிறகு, லோகேந்திரனையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என முடிவு செய்த கள்ளக்காதலர்கள், அக்டோபர் 22 நள்ளிரவு திட்டமிட்டனர். கர்நாடகாவிலிருந்து வந்த நாகேஷை வீட்டுக்கு அழைத்த மெட்டில்டா, தூங்கிய கணவனைத் தலையணையால் அழுத்தி கொல்ல முயன்றார். ஆனால் தப்பிய லோகேந்திரன், போலீஸில் புகார் செய்தார்.
வீட்டு தடயங்கள், போன் உரையாடல்களை ஆய்வு செய்த போலீஸார், சம்பவத்தை உண்மை என உறுதிப்படுத்தினர். ஏப்ரல் மாத கொலை குறித்தும் லோகேந்திரன் சந்தேகம் தெரிவித்தார். விசாரணையில், இருவரும் பாட்டி கொலை மற்றும் கணவன் கொலை முயற்சியை ஒப்புக்கொண்டனர். கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கள்ளக்காதலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அன்னூர் பகுதியில் இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலியுடன் 4 நாட்கள் டூர்! மனைவியின் கள்ளக்காதலால் கொலையாளியான கணவன்!