மகாராஷ்டிராவில் கோலாப்பூர் மாவட்டத்தின் ஆல்டே கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்வினி பித்ரே. அவர் 2005 ஆம் ஆண்டு ராஜு கோரே என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸித்தி என்ற மகளும் உள்ளார். அஷ்வினி பித்ரே, திருமணம் ஆவதற்கு முன்பு இருந்தே, கிட்டத்தட்ட 2000-ஆம் ஆண்டு முதல் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்தார். திருமணமான ஒரு வருடத்திற்குள், அஷ்வினி பித்ரே போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை உதவி ஆய்வாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
காவல் துறையில் சேர்ந்த பிறகு, அவர் முதலில் புனேவிலும் பின்னர் சாங்லியிலும் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், அதே காவல் நிலையத்தில் மூத்த காவல்துறை அதிகாரியாக இருந்த அபய் குருந்த்கரை, அஷ்வினி சந்தித்தார்.

இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அஷ்வினி காணாமல் போனார். அஷ்வினியை தொடர்பு கொள்ள முடியாததால் அவரது கணவர் ராஜு கோரும், மகள் ஸித்தியும் அஷ்வினி பணியாற்றிய கலம்போலி காவல் நிலையத்திற்குச் சென்று போலிசாரிடம் புகார் அளித்தனர்.
போலீசார் அஷ்வினி வசித்து வந்த அடுக்குமாடி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவரது செல்போன் மற்றும் லேப்டாப்புகளை சோதனை செய்தனர். அப்போது அஷ்வினிக்கும், மூத்த காவல் ஆய்வாளர் அபய் குருந்த்கருக்கும் இடையிலான உறவு பற்றி தெரியவந்தது.
இதையும் படிங்க: 50 மொழி பேசக்கூடிய AI டீச்சர்.. சாதனை படைத்த தனியார் பள்ளி..

இதை அடுத்து அஷ்வினி பித்ரே கொலை வழக்கில் அபய் குருந்த்கருக்கும் தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதற்கிடையே மரம் அறுக்கும் இயந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அஷ்வினியின் உடல் ஓடை பகுதியில் போலீசாருக்கு கிடைத்தது. போலீசாரின் விசாரணையில் அபய் குருந்தரின் செல்போன் சிக்னலும் அஷ்வினி கொலை செய்யப்பட்ட அதே நாளில் அதே பகுதியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. கொலை செய்யப்பட்ட அன்று அதாவது 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அபய் குருந்தரும் அஷ்வினியும் மும்பையில் உள்ள ஹோட்டலில் சந்தித்துள்ளனர். அதன் பிறகு, அவர்கள் இருவரும் ஒரே காரில் அபய் குருந்த்கரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அங்கே தன்னை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி அஷ்வினி, அபய்குருந்தரை வற்புறுத்தி உள்ளார். அப்போது வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட்டால் அஷ்வினியை அபய்குருந்தர் அடித்தே கொலை செய்து உள்ளார். உடலை மறைக்க அபய் குருந்தருக்கு அவரது நண்பர்களான ராஜு பாட்டீல், மகேஷ் ஃபல்ஷிகர் மற்றும் குந்தன் பண்டாரி ஆகியோர் உதவி உள்ளனர்.
அஷ்வினியின் உடலை மரம் அறுக்கும் இயந்திரத்தால் பல துண்டுகளாக்கி ஓடையில் வீசி உள்ளனர். மேலும் போலீசாரை குழப்பவும், அஸ்வினி உயிரோரு இருப்பதாக மற்றவர்களை நம்ப வைக்கவும் அபய்குருந்தர், அஷ்வினியின் மொபைலில் இருந்து தொடர்ந்து பலருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார்.

அவ்வாறு மெசேஜ் அனுப்பும் போது எப்படி இருக்கீங்க?' (How are you?) என்ற கேள்வியைக் கேட்க 'You' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். எப்போதும் 'You' என்று சொல்வதற்கு பதிலாக 'U' என்ற எழுத்தைதான் பயன்படுத்துவார். இதில் இருந்து அஷ்வினி காணாமல் போன சமயத்திலும் அபய் கடைசியாக அவருடன் இருந்துள்ளார். விசாரணையில், அஷ்வினி உயிருடன் இருப்பது போல் காட்டுவதற்காக அவரது கைபேசி மூலம் அபய் தொடர்ந்து மற்றவர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்தது.
கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் 5 ஆம் தேதி வழங்கப்பட்டது. அபய் குருந்த்கர், குந்தன் பண்டாரி மற்றும் மகேஷ் ஃபல்ஷிகர் ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் அமர்வில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வீரபாண்டி ஆறுமுகம் கொள்ளையடித்த ரூ80 லட்சம்... 28 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துக்கு வந்த சிக்கல்