கால் சென்டரில் வேலை இருக்கிற மாதிரி கால் பாய்க்கு ஆட்கள் தேவைன்னு விளம்பரம் செஞ்சு இருக்கு ஒரு மர்ம கும்பல். உல்லாசமா இருக்கலாம். அதே நேரம் பணமும் சம்பாதிக்கலாம்னு ஒரே நேரத்துல ரெண்டு லட்டுக்கு ஆசைப்பட்டவருக்கு நடந்த பரிதாப சம்பவம் இது. நீங்க சிங்கிளா? லைப் ரொம்ப போரிங்கா இருக்கா? நீங்க ஏன் எங்களோட மிங்கலாக கூடாது என்று மாடர்ன் மங்கைகளை வைத்து விளம்பரம் செய்து டேட்டிங் பண்ண வாங்க வாங்க என்று வாலிபர்களுக்கு வலைவிரிக்க கூடிய ஆப்புகள் இன்று ஏராளமாக வந்துவிட்டன. இத்தகைய கவர்ச்சியான விளம்பரங்களை எல்லாம் உண்மை என நம்பி, டெக்னாலஜி என்று வாயை பிளந்த முரட்டு சிங்கிள்ஸ் பலரும் ஆன்லைன் டேட்டிங் ஆப்பில் ரகசியமாக பணத்தை பறிகொடுத்து வருவதும் தொடர்கதையாகிவிட்டது. இப்படி காதல் கண்ணாமூச்சி ஆடுவதற்கு கண்மணிகளை தேடும் காளையர்கள் ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் திருமணமான ஆன்டிகளை திருப்திப்படுத்த கால் பாய்ஸ் தேவையென விளம்பரம் செய்து சில ஃபேக் ஐடிகள் ப்ரொபஷனலாக ஸ்கேம் செய்து வருகின்றன.
ஃபேஸ்புக் மற்றும் இஸ்டாகிராமில் இல்லத்தரசிகள் பதிவிடக்கூடிய புகைப்படங்களை கிராப் செய்து அதன் மூலம் போலியாக ப்ரொபைலை கிரியேட் செய்து பல இளைஞர்களை சேவை செய்ய அழைத்து நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படித்தான் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் குறைவான சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்துள்ளார். கூடுதலாக வேலை தேடி வந்தவருடைய கண்ணிற்கு கால் பாய்ஸுக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் சிக்கியிருக்கிறது. உடனடியாக அந்த ஐடியை தொடர்பு கொண்டு தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தான் தகுதியானவன் என்றும் தெரிவித்திருக்கிறார். நேர்காணலுக்கு விண்ணப்பித்திருந்த இளைஞரிடம் ஒரு சில ரகசிய தகவல்களை கேட்டு பெற்று கொண்டவர்கள் முதலில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும் என கூறி அவர்களுடைய அக்கவுண்ட்டை ஓபன் செய்துள்ளனர்.
ஜிபே மூலம் முதலில் ரூபாய் 500ஐ பெற்றுக்கொண்டவர்கள் அதன் பிறகு ப்ராசஸிங் பீ, மெம்பர்ஷிப் கட்டணம் என டிசைன் டிசைனாக அளந்துவிட்டு மொத்தம் 13,000 ரூபாய் சுருட்டி உள்ளனர். ஒவ்வொரு முறை பணம் கட்டுவதற்கு முன்பும் ஏதாவது ஒரு இல்லத்தரசியின் புகைப்படத்தை இளைஞருக்கு ஷேர் செய்யும் அந்த கும்பல் எலிட் கஸ்டமர் ஆடி காரில் பஸ் ஸ்டாண்ட் ஆர்ச்சருகே காத்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். உல்லாசமும் அனுபவித்து பணமும் தருகிறார்கள் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கிடைக்கும் என ஆசையாய் காத்திருந்தவருக்கு, அதுக்கு பின்னர் தான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை ஃபேக் ஐடியிடம் பறிகொடுத்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சீன நபருடன் சேர்ந்து ரூ.250 கோடி அபேஸ் செய்த உ.பி. கும்பல்.. 4 பேர் கைது.. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி..!
பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, ஆனால் எந்த ஆண்ட்டிக்கும் சர்வீஸ் செய்யாமல் அதற்கான காசும் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது. மிகுந்த பண கஷ்டத்தில் இருப்பதால் தனக்கு ஒரு அசைன்மெண்ட்டாவது கொடுங்கள் வறுமை வாட்டி வதைக்கிறது என வாட்ப் சாட்டில் மனமுடைந்து கதறி உள்ளார். ஆனால் இளைஞர் சென்டிமெண்ட்டாக பேசவும் இதற்கு மேல் இவரிடம் பணத்தை ஏமாற்ற முடியாது என தெளிவாக முடிவெடுத்த அந்த மோசடி கும்பல் கடையை மூடிவிட்டது. தற்போது பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து கதறி வருகிறார்.
இதையும் படிங்க: மதுரை மாநாடு முடியட்டும்; தமிழக அரசியலில் தடலாடி மாற்றம் நடக்கும் - மார்தட்டும் தவெக அருண்ராஜ்...!