புனிதமான காதல், பவ்யமான காதல், அட்ராசிட்டி நிறைந்த காதல் என பலவகை காதல் ஜோடிகளை பார்த்திருப்போம். ஆனால் இங்கு திருட்டு காதல் ஜோடியின் முகத்திரை கிழிந்த சம்பவம் கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உண்டியலை உடைத்து காணிக்கையை களவாடிய இளைஞர், அந்த பணத்தை ஹேண்ட் பேக்கில் போட்டு எதுவுமே நடக்காதது போல் தப்பிக்கும் இளம்பெண் ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து கோயிலில் கைவரிசை காட்டியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சேத்பட் சாலையில் உள்ள சங்கராபரணி ஆற்றங்கரை ஓரம் சோலை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கோயிலுக்குச் சென்ற இளம் ஜோடி ஒன்று கோயிலை சுற்றி நோட்டை மட்டும் உள்ளனர். தொடர்ந்து இருவரும் அவர்களது சதி திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து கொண்ட இளைஞர் உண்டியலின் அருகே சென்றும், வெளியில் இருந்து யாராவது கோயிலுக்கு வருகிறார்களா என இளம் பெண் வேவு பார்த்துள்ளார்..
இதையும் படிங்க: யார் இந்த பர்வேஷ் வர்மா?! அரவிந்த் கேஜ்ரிவாலை வீழ்த்திய பாஜகவின் ‘பாகுபலி’
இப்படி இருவரும் சதித்திட்டம் தீட்டி சரியான நேரம் பார்த்து இளம் பெண் சிக்னல் கொடுக்கவே பிடிப்பில்லாமல் வைக்கப்பட்டிருந்த உண்டியலை இளைஞர் கோயிலின் பின்புறம் தூக்கிச் சென்று உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துள்ளார்.
இது மட்டும் இன்றி திருடிய காணிக்கை பணத்தை அப்பெண்ணின் ஹேண்ட் பேக்கில் போட்டு மறைத்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து ஒன்றன்பின் ஒன்றாக தப்பி சென்றுள்ளனர். கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் இது குறித்து செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்ததில் இளம் ஜோடி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து யார் இந்த இளம் ஜோடி இவர்களுக்கு கோயிலில் என்ன வேலை ஏன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டார்கள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கோயில் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ளது இன்னும் சில கோயில்களில் தனது கைவரிசையை இந்த இளம் ஜோடி காட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு தேர்தலில் திமுக வெற்றி..! முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கிறேன் சந்திரகுமார் பேட்டி