டெல்லியின் முக்கிய பகுதிகளான கண்ணாட் பிளேஸ், ரோகினி, பிதாம்பூரா, தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதி, நாடாளுமன்ற வளாகம் உள்ள பகுதி ஆகிய இடங்கள் அனைத்தும் முன்பெல்லாம் பள பள என வெளிநாட்டில் இருப்பது போல ஒரு காட்சி அளிக்கும். ஆனால் தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுடைய துடைப்பம் சின்னத்திற்கு வேலை கொடுக்காமல் நார அடித்து விட்டார்கள் என்று சொல்லலாம். கண்ணாட் ப்ளேஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பழமையான வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் உள்ள வணிகவளாகப் பகுதிகள் அனைத்தும் தற்போது பாண் பராக், குட்கா போன்ற பொருட்களை துப்பி கடந்த 10 ஆண்டுகளாக தேவையான சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் செய்யப்படாமல் ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏக்கள் மற்றும் மாநகராட்சி பதவியில் இருந்தவர்கள் கண்டும் காணாமல் விட்டு விட்டார்கள்.

ஆனால் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ள பாஜகவின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேகா குப்தா அதிரடியாக தினம்தோறும் டெல்லி சாலைகளில் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக டெல்லி சாலைகளில் சுற்றி திரிந்து வந்த பல ஆயிரக்கணக்கான மாடுகளை பிடித்து கோசாலைகள் அமைக்கும் பணியில் அவர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தான் அழுக்காக நாறிப் போய் உள்ள டெல்லியை ஒட்டுமொத்தமாக ஒரே வாரத்தில் சுத்தம் செய்யும் நடவடிக்கையை ரேகா குப்தா வேகப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பரபர அரசியல் களம்! பிரதமருடன் நயினார் பேசிய முக்கிய விவகாரம்..!

இதுகுறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், அடுத்த 20 நாட்களில், டெல்லியில் ஒவ்வொரு மட்டத்திலும் விரிவான தூய்மை இயக்கம் நடத்தப்படும். இன்று, அனைத்து அதிகாரிகளையும் அழைத்து, டெல்லியின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு சாலையிலும், ஒவ்வொரு இடத்திலும் தூய்மை இயக்கம் ஒரு பெரிய அளவில் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டோம். ஒவ்வொரு அதிகாரியின் பொறுப்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அவர்களின் மண்டலங்கள் மற்றும் பகுதிகளுக்கு பொறுப்பாவார்கள்.

ஏதேனும் ஆக்கிரமிப்பு காணப்பட்டாலோ அல்லது பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டாலோ, அது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே யமுனா நதி சுத்தம் செய்யும் வேலைகளிலும் அதிரடியாக ரேகா குப்தா இறங்கி உள்ள நிலையில் டெல்லியை ஒட்டுமொத்தமாக ஒரே வாரத்தில் சுத்தம் செய்யும் நடவடிக்கையை ரேகா குப்தா வேகப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில் ட்ரிபிள் இஞ்சின் ஆட்சி... டெல்லி மேயர் பதவியையும் தட்டித்தூக்கிய பாஜக..! ஆம் ஆத்மி வாஷ் அவுட்..!