அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனுக்கும் இடையில் ஓயாத யுத்தம் நடைபெற்று வருகிறது. மாறி மாறி இருவரும் ஒருவரை ஒருவர் அட்டாக் செய்து வருகிறார்கள். இதில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இல்லை என்றால், நாங்க தேசிய ஜனநாயக கூட்டணில மீண்டும் இணைவது குறித்து பரிசீலிப்போம் என டிடிவி தினகரன் திரும்ப, திரும்ப கூறி வருகிறார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த டிடிவி தினகரன், டிசம்பர் மாதத்தில் நல்ல செய்தி வரும் தெரிவித்திருந்தார்.
எதனால் இப்படி சொன்னார் என அரசியல் வட்டாரத்தில் விசாரித்து பார்த்தோம். அப்போது தான் உள்துறை அமைச்சரான அமித் ஷாவுடனான எடப்பாடி பழனிசாமி மீட் நடந்தது இல்லையா, அங்கு எங்களுடைய கட்சியிலிருந்து அதாவது முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் போன்ற யார் வந்தாலும் இனிமேல் பார்க்காதீர்கள். அது கட்சிக்கும் நல்லதில்ல, கூட்டணிக்கும் நல்லதில்ல. அவங்களை எல்லாம் தவிர்த்துவிடுங்கள் என எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடமே நேரடியாக கோரிக்கை வைத்துள்ளாராம். அதற்கு ஒருங்கிணைந்த அதிமுக நல்லது இல்லைன்னா என்டிஏ கூட்டணியில இவர்கள் அனைவரையும் இணைத்து பயணிச்சா வெற்றி கிடைக்கும் அப்படின்னு அமித்ஷா தரப்பு தெரிவிச்சிருக்காங்க.
ஓகே, அப்படின்னா என்டிஏ கூட்டணியில் பாஜாகா ஒதுக்கப்படுகின்ற தொகுதிகளில் இருந்து வேண்டுமானால் நீங்கள் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரனுக்கு தொகுதிகளை பங்கீட்டு கொடுத்துக்கோங்க என பேசப்பட்டிருக்கு. அதை எடப்பாடி பழனிசாமியும் ஆமோதித்ததாக கூறப்படுகிறது. இது எடப்பாடி பழனிசாமியின் பலகீனத்தை அமமுகவிற்கு காட்டிவிட்டதாகவும், இந்த நேரத்தில் இறங்கி அடிச்சால் தானே நம்ப கை ஓங்கியிருக்கும் என்றெல்லாம் அதிமுகவினர் புலம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: முகமூடியார் பழனிச்சாமி... வீரவசனம் பேசிட்டு அமித்ஷாவை பார்த்து இருக்காரு! நக்கலடித்த டிடிவி தினகரன்
இது ஒருபுறமிருக்க, எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவே மாட்டோம் என விடாப்பிடியாக இருக்கிறாராம் டிடிவி தினகரன். ஏனெனில் அமமுக கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு தான் இழப்பு, தனக்கு ஒன்றும் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ஏனெனில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேர அமமுக மற்றும் ஓபிஎஸ் டீம் ஏற்கனவே முயற்சித்து வருகிறது.
தற்போது விஜய் சுற்றுப்பயணத்தில் பிசியாக இருப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாம். டிசம்பரில் விஜய் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆகிவிடுவார். அதன்பிற்கு கூட்டணி சம்பந்தமாக பேச வாய்ப்பு இருக்கும். அந்த சமயத்தில் தவெக உடன் அமமுக கூட்டணி அமைக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது என்பதே டிடிவி தினகரனின் டிசம்பர் பிளானாம். அதுமட்டுமல்ல நமக்கு ஆப்ஷன் இருக்கும் போது எதற்காக பாஜக, அதிமுகவை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம் டிடிவி.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது யார்? சசிகலா மட்டும் இல்லைனா... இபிஎஸ்-ஐ லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி..!