• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்திருப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை உணர்த்துவதற்கான அறிகுறியாகும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 07 Oct 2026 17:57:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dip in Bypoll Turnout Reflects Public Resentment Against TVK Govt: BJP Chief Nainar Nagendran.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி மீது மக்கள் மத்தியில் குறுகிய காலத்திலேயே ஏற்பட்டுள்ள தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தும் தெளிவான அறிகுறி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இன்று (07-10-2026) செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

    அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி எதை நினைத்துப் பேசுகிறார் என்றே தெரியவில்லை; எஸ்.ஐ.ஆர்  நடைமுறையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அவர் புலம்புகிறார். கடந்த 20 ஆண்டுகளாக இறந்துபோன நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? அல்லது வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு இங்கு போலியாக வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? எஸ்.ஐ.ஆர் நடைமுறை அமலுக்கு வந்த பிறகுதான் கர்நாடகா மற்றும் கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது; தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. 

    இந்த நடைமுறை பாஜகவுக்குச் சாதகமாக இருந்திருந்தால் தமிழகத்தில் நாங்கள்தானே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும்? கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்பு தூய சக்தி, தீய சக்தி என்று பேசிக்கொண்டிருந்தவர்கள், இன்றைக்கு கரப்ஷன் சக்தி என்று கூறுகிறார்கள்; அதைத்தான் நாங்களும் சுட்டிக்காட்டுகிறோம். கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டவர்களே எஸ்.ஐ.ஆர் நடைமுறை நல்லது எனக் கூறியுள்ளனர்; ஆனால் ராகுல் காந்தி தனக்கு வாக்குரிமை போய்விடுமோ என அச்சப்படுகிறார் என்றார்.

    இதையும் படிங்க: விஜய்யும் உதயநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்: நாராயணன் திருப்பதி கடும் விமர்சனம்!

    BJP

    தொடர்ந்து இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர், தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட தொகுதிகளில் பொதுத்தேர்தலை விட வாக்கு சதவீதம் சரிந்திருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் மீது ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பலத்த அதிருப்தியை உணர்த்துகிறது. தமிழகத்தில் பொருளாதாரம் பாதாளத்திற்குச் சென்று வீழ்ச்சியடைந்து வருகிறது; ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வரி வருவாய் பன்மடங்கு கூடிக்கொண்டிருக்கிறது. 

    தமிழகத்தில் கடன்கள் மட்டுமே அதிகரித்து வருகின்றன; அசோக் லேலண்ட் போன்ற நமது உள்நாட்டு நிறுவனங்களை இங்கேயே அழைத்துப் பேசாமல், லண்டனில் சென்று சந்திப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழகத்தில் நாள்தோறும் 2 முதல் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது; குடிநீர்ப் பஞ்சம் வரப்போகிறது, அதற்கான மாற்றுத் திட்டம் என்னவென்றே தெரியவில்லை, எவ்வித ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்படுவதில்லை என்று சாடினார்.

    மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆற்று மணல் குவாரிகளில் நடந்த பிரம்மாண்ட ஊழல் குறித்து அமலாக்கத்துறை தற்போது முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது; தவறு நடந்திருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. ஆனால், கடந்த அரசு என்ன செய்ததோ அதையேதான் இந்த அரசும் தொடர்ந்து செய்கிறது. தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொடூர இரத்தவெறிச் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.

    முன்விரோதத்தைத் தாண்டி, கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்தாடுவதால்தான் இத்தகைய அதிர்ச்சிகரமான குற்றங்கள் நிகழ்கின்றன. கடந்த 149 நாட்களில் 500-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் பாலியல் வன்கொடுமைகள் மட்டுமே 70 முதல் 80 வரை பதிவாகியுள்ளன; இதில் குற்றவாளிகளாகச் சிக்கியவர்களில் 30 பேர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளாகவே உள்ளனர்; லாக்கப் மரணங்களும் நிகழ்ந்துள்ளன என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

    இறுதியாக, கடந்த பொதுத்தேர்தலின் போது 7 இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்த முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த இடைத்தேர்தலில் ஒரே ஒரு கிராமத்தில் 39 இடங்களில் இறங்கிப் பிரச்சாரம் செய்துள்ளார்; அவரது அரசியல் செல்வாக்கும் மதிப்பும் நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்குச் சரிந்து வருகிறது; மக்களுக்கு சேவை செய்யும் உண்மையான எண்ணத்தை ஆளும் கட்சியினர் முற்றிலுமாக மறந்துவிட்டனர் என்று நயினார் நாகேந்திரன் ஆவேசமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ராகுலும், சோனியாவும் வாக்குத் திருட்டால் எம்.பி.க்கள் ஆனார்களா? தேர்தல் கமிஷன் விவகாரம்! பாஜக கேள்வி!

    மேலும் படிங்க

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking:

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    செய்திகள்

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு
    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share