நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் 2,538 பதவிகளை உள்ளடக்கிய பண மோசடி நடந்துள்ளதாகவும் ஒரு பதவிக்கு 35 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் நபர்களில், கடினமாகப் படித்து, விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களுக்கு, ரூ.35 லட்சம் லஞ்சம் வாங்க முடியாததால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
888 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்பான வழக்கில் இந்த உண்மையை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் கே.என். நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டதற்கு தமிழக வெற்றிக்கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த பணியாளர்கள் தேர்வில் 35 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பதவி வழங்கப்பட்டது என்று அமலாக்கத் துறை அதிரடியாக அறிவித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநில உரிமைகளை பறிப்பதாக இல்லையா? இப்படியா பண்ணுவீங்க... ED-க்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்...!
லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு பதவி கனவை இப்படி corruption model ஆட்சியினால் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வஞ்சித்து வருகிறார் என்று குற்றம் சாட்டி உள்ளது. படித்தவர்கள் யாரும் உயர்ந்திடக் கூடாது, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அரசு பதவி என்பது தான் உங்கள் நிலைப்பாடா என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்துக்கு செக்! நிர்வாக குழுவில் கை வைத்த விஜய்..! அந்த 3 பேர் யாரு தெரியுமா?