கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் தாவிகா தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் உயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்த விஜய், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை அடுத்து மீண்டும் தவெக தேர்தல் களத்தில் முழு வேகத்துடன் சுழல ஆரம்பித்தது. மறுநாளே கட்சி செயல்பாடுகளை நிர்வகிப்பதற்காக நிர்வாக குழுவை அமைத்த விஜய், தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிரான கண்டன அறிக்கைகளையும் வெளியிட ஆரம்பித்தார்.
தற்போது ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணைய விதிகளின் படி வருடத்திற்கு ஒரு பொதுக்குழு மற்றும் இரண்டு செயற்குழுவை ஒரு அரசியல் கட்சி என்பது கூட்ட வேண்டியது கட்டாயம். அந்த அடிப்படையில ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு நடந்து முடிந்திருக்கிறது. இருந்தாலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக சிறப்பு பொதுக்குழுவை இன்று விஜய் கூட்டியுள்ளார்.
கட்சி ரீதியிலான உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான நிகழ்வுகளும், அது தொடர்பான பல்வேறு முக்கியமான முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட இருக்கிறது.இந்த சிறப்பு பொதுக்குழுவில் பத்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என தகவல்கள்பத்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: இது அதிமுகவுக்கு நடக்கலையே! தவெக ஏற்பாடு சரியா இல்ல.. சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு..!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களுக்கு இரங்கல் தெரிவித்து முதல் தீர்மானமும், தற்போது அரசியலில் பரபரப்பை கிளப்பி வரும், கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் தீர்மானம், மீனவர்கள் கைதை கண்டித்த தீர்மானம், சிறப்பு தீவிர திருத்தம் எனும் எஸ்ஐஆரை கண்டித்த தீர்மானம், டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை சரியாக மேற்கொள்ளாத தமிழக அரசுக்கு கண்டம்,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்டக்கூடாது, மக்கள் சந்திப்பின் போது விஜய் மற்றும் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும், தவெக மற்றும் அதன் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு கண்டனம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முக்கியமாக 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் தேர்தல் விவகாரங்கள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரமும் இறுதிபட்ச உச்சபட்ச அதிகாரத்தை தலைவருக்கு அளித்து இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சிறப்பு பொதுக்குழுவில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே உரிய முறையில் அழைப்பும் பாஸும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பாஸ் வைத்துள்ள நபர்களுக்கு மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உள்ளே செல்லும் எந்த நபருக்குமே எந்த விதமான மின்சாதன பொருட்களும் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், அதை பாதுகாப்பாக வைப்பதற்காக 12 கவுண்டர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த 12 கவுண்டர்களிலும் பாதுகாவலர்கள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ்களை பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கிவிட்டு உள்ளே அனுமதிக்கின்றனர். அனைவரும் அடையாள அட்டையுடன் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மிஸ் ஆகக் கூடாது... விஜயின் கரூர் பயண ஏற்பாடுகள் செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைப்பு...!