"ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் லட்சக்கணக்கில் பணம் தருவோம்" என சமூக ஊடகங்களில் நூதன விளம்பரங்களைப் பார்த்து நம்பிய ஆண்கள், ஏஜென்சியில் பணத்தை கட்டி ஏமாந்து நிற்கின்றனர். இது போன்ற மோசடி வகைகள் கடந்த 2022 முதல் பரவி வருவதாக சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
இந்த வகை மோசடியின் உதாரணமாக, புணேவில் ஒரு ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.11 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மோசடி கும்பல், அடையாள அட்டை சரிபார்ப்பு, விதிமுறைகள் என்று சொல்லி பணம் பறித்து, தலைமறைவாகி உள்ளது. இப்படியெல்லாம் மோசடி நடக்கிறதா? என்று அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் உலகில், மோசடிகள் புது-புது வடிவங்களில் வருகின்றன. சமூக ஊடகங்களில் "துரோகம்" என்று சொல்லி ஏமாற்றும் விளம்பரங்கள் பரவலாக உள்ளன. இந்த 'கர்ப்ப வேலை மோசடி' அதில் ஒன்று. "நான் தாயாவதற்கு (கர்ப்பமாக்க) ஒரு ஆண் தேவை. ரூ.25 லட்சம் தருகிறேன். கல்வி, சாதி, அழகு ஒன்றும் பொருட்டல்ல" என்று ஒரு பெண் பேசும் விளம்பரம், ஆண்களை ஈர்க்கிறது. 
இதையும் படிங்க: பீரியட்ஸ்னு பொய்யா சொல்லுறீங்க?! மாதவிடாய் காரணமாக தாமதமாக வந்த பெண்கள்! ஆடைகளை கழற்றி கொடூரம்!!
இதைப் பார்த்து தொடர்பு கொள்பவர்களை, "ஏஜென்சி" என்று சொல்லி ஏமாற்றுகின்றனர். பதிவு, சரிபார்ப்பு, GST என்று பல காரணங்களைக் கூறி பணம் பறிக்கின்றனர். பணம் கிடைத்ததும், தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. 
இந்த மோசடியின் உதாரணமாக, புணேவைச் சேர்ந்த 44 வயது ஒப்பந்ததாரர் ஒருவர் சமூக ஊடகத்தில் இந்த விளம்பரத்தைப் பார்த்தார். விளம்பரத்தில் கூறிய எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியபோது, "கர்ப்பமாக்கும் வேலை" தொடர்பான ஏஜென்சி பணியாளர் என்று சொல்லி, அடையாள அட்டை, விவரங்கள் கேட்டார். 
சலுகை வேண்டுமென்றால் சரிபார்ப்பு விதிமுறைகள் உள்ளன என்று கூறி, பதிவு, சரிபார்ப்பு, GST என்று பல காரணங்களைக் கூறி, பல்வேறு வழிகளில் ரூ.11 லட்சம் பணம் பறித்தனர். செப்டம்பரில் இருந்து அக்டோபர் 23 வரை 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அவர் செய்துள்ளார். அவர் உஷாராகி கேள்வி கேட்டபோது, தொலைபேசி எண் வேலை செய்யாமல் போனது.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாக புணே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை, அவர் கொடுத்த தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்குகளை முடக்கி விசாரணை நடத்தி வருகிறது. சைபர் கிரைம் போலீஸ், இந்த வகை மோசடிகள் 2022 முதல் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 
பிகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற மோசடிகளில் கைது நடவடிக்கைகள் நடந்துள்ளன. சைபர் நிபுணர்கள், "இந்த விளம்பரங்கள் கலாச்சார, உணர்ச்சி பார்வையில் ஏமாற்றுகின்றன என்கின்றனர்.
இந்த மோசடி, சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இப்படியெல்லாம் மோசடி நடக்குமா?" என பலர் கேட்கின்றனர். ஆண்கள் சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களை நம்பி, பணம் இழக்கின்றனர். இதுபோன்ற மோசடிகள், குடும்பங்களை அழிக்கின்றன. போலீஸ், "தெரியாதவர்கள் பணம் கேட்டால் அனுப்ப வேண்டாம். விளம்பரங்களை நம்ப வேண்டாம்" என எச்சரிக்கிறது. சமூக ஊடகங்களில் இந்த விளம்பரங்கள் பரவுவதால், விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
இதையும் படிங்க: செங்கோட்டையன், ஓபிஸ், டிடிவி தினகரன்!! விஜய் கட்சிக்கு வலை வீசும் மூவர் கூட்டணி !! சசிகலாவுக்கும் சம்மதமாம்?!