கடலூர் மாவட்டம் ராமநாத்தம் அடுத்த அதனத்தம் கிராமத்தில் கடலூர் மாவட்ட மேற்கு மாவட்ட விடுதலை சித்தை கட்சியின் முன்னாள் பொருளாளர் செல்வம். அவருக்கு சொந்தமான இடத்தில் தகர கொட்டையை அமைத்து அதில் கள்ளநோட்டை அச்சடித்ததாக கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி அவர் வீட்டில் ஐந்து வாக்கி டாக்கிகள், ரெண்டு ஏர் கன், ஒரு டிராக்டர் ஒரு ஜேசிபி இயந்திரம், சொகுசு கார்கள் என பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கள்ள நோட்டுகள் 86000 ரூபாயையும் பறிமுதல் செய்தனர். இதில் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக ராமநத்தம் போலீசார் 6 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சடிக்கும் விவகாரத்தில் சிக்கிய செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார். தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடைபெற்ற நிலையில் செல்வம் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க: சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்!

இதனிடையே கடந்த மாதம் செல்வத்துடன் சேர்ந்து கூட்டாக தொழில் செய்து வந்த கமல் குமார் என்பவரை ராமநத்தம் தனியார் வேளாண் கல்லூரி அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த வழக்கில் முக்கிய முக்கிய குற்றவாளியான செல்வத்தை மூன்று தனிப்படை போலீசார் தேடி வந்தனர். கடந்த ஒரு மாதமாக தேடி வந்த நிலையில் தற்போது அவர் கர்நாடக மாநிலத்தில் தனிமறைவாக இருந்ததாகவும் அங்கு அவரை கைது செய்து தற்போது விசாரணைக்காக ராமணத்தம் காலம் அழைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: விசிக-வுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக... சட்டப்பேரவையில் நிகழ்ந்த வெயிட்டான சம்பவம்!!