தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வாயிலாக அழைப்பிதழ்களை அனுப்பியிருந்தார்.

கூட்டம் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக, அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கருத்தை சுட்டிக்காட்டி பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காவிரி விவகாரத்தை திசை திருப்புவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "மேகதாது விஷயத்தில் விஜய் கப்சிப்"..! இதுக்கு மட்டும் மீட்டிங்கா..? அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விளாசிய கனிமொழி.!
தமிழ்நாட்டின் நலனில் அக்கறையில்லை என்பதையே திமுகவின் முடிவை காட்டுகிறது என்று தெரிவித்தார். திமுக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட சொல்வது அரசியல் காரணங்களுக்காக தான் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார். அரசின் கூட்டத்தை திசை திருப்ப கனிமொழி முயல்வதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து கட்சி எம்பிகள் கூட்டத்தை திமுக புறக்கணிப்பது முறையற்றது என்று தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், தொகுதி மறு வரையறையை திமுக எதிர்கிறதா அல்லது ஆதரிக்கிறதா என்பதை கூற வேண்டும் என்று தெரிவித்தார். திமுக தலைமைக்கு அமைச்சர் ராஜ்மோகன் இவ்வாறு வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: உதயநிதி கைது விவகாரம்... 'சட்டமன்றத்தில் பங்கேற்க விடாமல் செய்த கோழைத்தனம்' - கனிமொழி கடும் கண்டனம்!